சந்திராஷ்டமத்தில்
இருந்து தப்பிக்க எளிய வழி
சந்திராஷ்டமம்
என்பது குறிப்பிட்ட ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு 8-ஆம் இடத்தில் சந்திரன் நிலைபெறும்
காலம். இவ்வாறு சந்திரன் நிலைபெறும் காலம் இரண்டே கால் நாள்களாகும். சந்திரன்
என்பது கோசார சந்திரனையும், அஷ்டமம் என்பது எட்டாமிடத்தையும் குறிக்கும்.
சந்திரனை
“மனோகரன்’ என்றும் போக்குவரத்துக்குக் காரகன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
சந்திரன் எப்போதுமே மந்த புத்தி உடைய கிரகம். அந்த மனோகரன் 8-இல் மறையும்போது மன
உளைச்சல், கோபம், ஆத்திரம், மறதி, எரிச்சல், பொறுமையிழத்தல் போன்ற எதிர்மறையான
குணங்களைத் தருவார். இப்படிப்பட்ட காலங்களில் வாகனங்களில் கவனமாகச் செல்ல வேண்டும்
என்பது முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
சந்திராஷ்டமம்
என்பது சந்திரனின் சுழற்சி காரணமாக ஏற்படும் ஒரு சிறு தோஷம். உதாரணமாக, ஒருவருக்கு
விருச்சிக ராசி ஜென்ம ராசி என்றும், அனுஷம் ஜென்ம நட்சத்திரம் என்றும்
அமைந்துள்ளது என்றால், விருச்சிகத்துக்கு 8-ஆம் ராசியான மிதுன ராசியில் சந்திரன்
சஞ்சாரம் செய்யும் காலம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.
வேறொரு ஜோதிட கணிதப்படி, குறிப்பிட்ட ஜாதகரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து
எண்ணி 17-வது நட்சத்திரம் முதல் உள்ள காலம் சந்திராஷ்டமம் ஆகும்.
சந்திராஷ்டம
தினத்தில் இருந்து தப்பிக்க வழி……
ஒருவருக்கு சந்திராஷ்டமம் நடக்கும் நாள்களில் சுப நிகழ்ச்சிகளையும், முக்கிய முடிவுகள் எடுப்பதையும், கடன் கொடுப்பது-வாங்குவது போன்றவற்றையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
ஒருவருக்கு சந்திராஷ்டமம் நடக்கும் நாள்களில் சுப நிகழ்ச்சிகளையும், முக்கிய முடிவுகள் எடுப்பதையும், கடன் கொடுப்பது-வாங்குவது போன்றவற்றையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மாதம்
ஒருமுறை இரண்டே கால் நாள் சந்திராஷ்டமம் நீடிக்கிறது. முதல் நாள் பதட்டம் அதிகமாக
இருக்கும். இரண்டாம் நாள் 25 சதவீதமாகக் குறைந்துவிடும்.
இரண்டாம்
நாளில் சுபநிகழ்ச்சிகள் செய்யலாம். முதல் நாள் செய்தேயாக வேண்டும் என்ற கட்டாயம்
இருந்தால் விநாயகருக்குத் தயிர் அபிஷேகம் செய்து அருகல்புல் சாற்றி வழிபட்டு
செய்யலாம்.
ஆஞ்சநேயருக்கு
வெற்றிலை மாலையை சாற்றி வழிபட்டு வந்தால் சிரமம் நீங்கும்.
கூடுமானவரை
“மௌனமே மகா மருந்து’ என்று நினைத்து அன்றைய நாள்களில் யாரிடமும் அதிகம் பேசாமல்,
இறைவனை தியானித்தபடி, முடியுமானால் மெளனவிரதம் இருப்பதும்தான் இதிலிருந்து
தப்பிக்க ஒரே வழி!
No comments:
Post a Comment