Wednesday, 20 May 2015

ராகு- கேது தோஷம்

கோவையிலிருந்து பூண்டி, வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் வழியில் செம்மேடு என்ற இடமுள்ளது. அங்கிருந்து சற்று தொலைவில் முட்டத்து ஈஸ்வரர்- மனோன்மணி ஆலயம் உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், பல அற்புதங்களைக் கொண்ட ஆலயம். சர்ப்ப தோஷம், நாகதோஷம், ராகு- கேது கிரகபாதிப்பு உள்ளவர்கள் வழங்கும் பாலை இந்த முட்டத்து ஈஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது பாலின் நிறம் மாறுவதைக் காணலாம். (திருநாகேஸ்வரம் மாதிரி). இங்கு வளராத- காய்க்காத வில்வமரமும் உள்ளது. ராகு- கேது பெயர்ச்சியை முன்னிட்டு இங்குசென்று வழிபடலாம். டவுன் பஸ் வசதி உண்டு. காந்திபுரம் வெள்ளியங்கிரி (பூண்டி) பேருந்தில் செம்மேடு பள்ளிக்கூட ஸ்டாப்பில் இறங்கவேண்டும்.

No comments:

Post a Comment