Wednesday, 20 May 2015

மூன்று உடல்கள்

மூன்று உடல்கள்
↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓
அவை
1. தூல சரீரம்
2.சூக்கும சரீரம்
3. காரண சரீரம்.
★இந்த
மூன்றையும் சுற்றிப் போர்வை போல
அமைந்தவை ஐந்து கோசங்கள்
என்பது வேதாந்திகள் கருத்து.
தூல சரீரத்துக்குப் போர்வை போல
இருப்பது அன்னமய கோசம்.
★சூக்கும
சரீரத்துக்குப் போர்வை போல
இருப்பது 1. பிராணமய கோசம் 2.
மனோமய கோசம் 3. விஞ்ஞான மய கோசம்
காரண சரீரத்துக்குப் போர்வை போல
இருப்பது ஆனந்தமய கோசம்.
விஞ்ஞான மருத்துவம் மேற்கண்ட
பாகுபாட்டை இன்று வரை உணரவில்லை.
★மரணத்துக்குப் பிறகு உயிர் தூல
சரீரத்தை உதறிவிட்டு சூக்கும சரீரம்,
காரண சரீரம் என்ற இரண்டுடன் பயணத்தைத்
தொடர்கிறது. பாவ
புண்ணியங்களுக்கு ஏற்றபடி பல்வேறு
பிறவிகளையும், உலகங்களையும்
அடைந்து அலைகிறது.
உயிர் என்றைக்குக் காரண
சரீரத்தை உதறுகிறதோ அப்போதுதான்
நிரந்தர விடுதலை!
★அதுவரை மீண்டும் பிறப்பு! மீண்டும்
இறப்பு! இப்படிச் செத்துச் செத்துப்
பிறப்பதுதான் உயிரின் பயணம்.
இது ஒரு நீண்ட நெடிய பயணம்.
எண்ணங்களாலும், ஆசைகளாலும்
நிரம்பியது காரண சரீரம்.
மனம் மற்றும் உணர்ச்சிகளின் இருப்பிடம்
சூக்கும சரீரம்.
★மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற
ஐம்பொறிகளாலும், சுவை, ஒளி, ஊறு,
ஓசை, நாற்றம் என்ற புலன்களின்
அறிவாலும் செயல்படுவது தூல சரீரம்.
மனிதன் ஒன்றை ருசிக்கும் பொழுது,
முகரும் பொழுது, தொடும்
பொழுது, கேட்கும் பொழுது,
பார்க்கும் பொழுது தூல சரீரத்தினால்
செயல்படுகிறான்.
கனவு காணும் பொழுது,
கற்பனை செய்யும் பொழுது, ஒன்றைத்
தீர்மானிக்கிற பொழுது சூக்கும
சரீரத்தினால் செயல்படுகிறான்.
ஒருவன் யோகம், தியானம், தவம் போன்ற
ஆன்மிகப் பயிற்சிகளில் இருக்கும்
போதும், எண்ணும்போதும் காரண
சரீரத்தில் செயல்படுகிறான்.
★கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில்
மட்டுமே காரண சரீரம் பற்றி உணர
முடியும். காரண சரீரம் மிக மிக
மெல்லியது. மிக அதிகமான
படைப்பாற்றல் கொண்டது.
காரண சரீரம் இறைவனது படைப்புக்குத்
தேவையான 35
எண்ணங்களின் சேர்க்கையால்
ஆனது என்பர்
சூட்சும சரீரம் 19 மூலப் பொருள்களால்
ஆனது என்பர்.
தூல சரீரம் 16 மூலப் பொருள்களால்
ஆனது என்பர்.
மரணத்தின்போது, இந்த உயிர் தூல
சரீரத்தை உதறிவிட்டு சூக்கும
சரீரத்தோடும் காரண சரீரத்தோடும்
வெளியேறுகிறது.
★அவ்வாறு வெளியேறும்
போது பந்தபாசம், ஆசைகள், ஆழ்ந்த
நினைப்புகள், நட்பு, காதல்,
பழிவாங்கும் உணர்ச்சி, நிறைவேறாத
ஆசைகள் முதலிய
வாசனைகளோடுதான்
வெளியேறுகின்றது.
சூக்கும சரீரம்;.
◆◆◆◆◆◆◆◆◆◆◆
★தூல சரீரத்திலிருந்து சூக்கும சரீரம்
பிரிந்து செல்லும் ஆற்றல் பெற்றது.
அது மின்சாரம் போல அதி வேகத்துடன்
செல்லும் சக்தி படைத்தது. சூக்கும
சரீரம் வெளியில் உலவுகிறபோது தூல
சரீரத்தின் உருவத்துடனும்
அமைப்புடனும் உலவக்
கூடியது என்கிறார்
★ஆனால் ஒரு வித்தியாசம். சூக்கும
சரீரத்தின் கால்கள் மட்டும் நிலத்தில்
படாது. அதனால்தான் பேய்களின்
கால்களும், தேவர்களின் கால்களும்
நிலத்தில் படுவதில்லை.
L


No comments:

Post a Comment