Wednesday, 5 August 2015

திருமணம் செய்ய இருப்பவர்களின் கவனத்திற்கு

திருமணம் செய்ய இருப்பவர்களின் கவனத்திற்கு;
முதல் இரவு அறை ;
முதல் இரவு அறையில் மணமகன் கிழக்கு நோக்கி இருக்க , மணமகள் அவனுக்கு பால் பழம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும் . அதேபோல் கணவர் கொடுக்கும் பாலை மணமகள் மேற்கு அல்லது தெற்கு முகமாய் அமர்ந்து பெற வேண்டும்.இப்படி செய்தால் தீர்க்க ஆயுளும் , மணமக்களிடையே அன்பும் உண்டாகும்.
முதல் இரவுல்காலம் நல்ல லக்கினமாகவும் , சுக்கிரன் ,குரு, புதன் போன்ற ஓரைகளில் செய்வது மிகவும் நல்லது.மேலும் பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்பட்ட 10-ம் நாள் முதல் 20-ம் நாள்வரை உள்ள நல்ல நாளாய்ப் பார்த்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்வது அவசியம் .
கிருத்திகை நட்சத்திரம், அமாவாசை, பௌர்ணமி, சூரிய, சந்திர கிரகணம், சிவராத்திரி இந்த நாட்களில் முதலிரவு ஏற்பாடு செய்யக் கூடாது . தேய்பிறையில் வரக்கூடிய அஷ்டமி , சஷ்டி,சதுர்த்தி, ஏகாதசி நாட்களில் கூடாது.மணமக்களின் பிறந்த நட்சத்திரத்தில் இருந்து ஏழாவது நட்சத்திரம் நடக்கக்கூடிய காலத்திலும் ,ராசிக்கு எட்டில் சந்திரன் இருக்கும் சந்திராஷ்டம காலத்திலும் கூடாது.அசுவதி, ஆயில்யம், கேட்டை,ரேவதி, மிருகசிரிஷம்,சித்திரை, அவிட்டம் ,பரணி, பூசம் , புனர்பூசம் ஆகிய நட்சத்திர நாட்கள் ஆகாது.

No comments:

Post a Comment