Friday, 28 August 2015

குபேரர் படங்களாக மாட்டி வைக்காதீர்!!

குபேரர் படங்கள்,சிலைகள் இப்போது மார்க்கெட்டில் அதிகம் கிடைக்கின்றன...பூஜை அறையிலும் அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர்..இதில் ஒரு சிக்கல் இருக்கிறது 30 வருடத்துக்கு முன்பு இல்லாத வாஸ்து பகவான் போலத்தான் குபேரனும்.50 வருடங்களுக்கு முன்பு கூட லட்சுமி படம் வைத்து வழிபட்டனர் ,,,ஆனால் குபேரன் இல்லை..குபேரனுக்கும் லட்சுமிக்கும் என்ன சம்பந்தம்..? புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா..?இதுவெல்லாம் யோசிக்க வேண்டும்
ராவணன் தம்பி குபேரன் என விக்கிபீடியா சொல்கிறது..அரக்கர் குலத்தை சேர்ந்த கடவுள்....குபேரனை விட சிறப்பு மகாலட்சுமிதான்...காரணம் அதில் இருக்கும் மங்கள சின்னங்கள்.மகாலட்சுமியின் சிரிப்பும், அழகும் ,கனிவான,கலையான , தோற்றமும் நம்பிக்கையை தருகிறது...குபேரன் தொந்தியும் ,தொப்பையுமாக இப்போதுள்ள தமிழனை போல சோமபலாக இருப்பதும் எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கும்.. இப்படியும் யோசிச்சு பார்த்துட்டேன் smile emoticon
எனக்கென்னவோ மகாலட்சுமி உருவத்தில்தான் அதிக பாசிட்டிவ் சக்திகள் கிடைக்கின்றன.....என்றுதான் நினைக்கிறேன்.குபேரரை வழிபட நினைப்போர் திருச்சி - பெரம்பலூர் சாலையில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் 12 ராசிக்கும் குபேரர் மீன் வாகனத்தில் அருள்கிறார். அங்கு சென்று வழிபட்டு வரலாம்..வீடு,அலுவலகம் முழுக்க குபேரர் படங்களாக மாட்டி வைக்காதீர்!!

No comments:

Post a Comment