Wednesday 5 August 2015

பௌருஷம்:-

பௌருஷம்:-
பிரபஞ்ச வாழ்க்கையிலே நாம் முக்கியமாக அனுசரிக்க வேண்டியது "பௌருஷம்" அல்லது தன ஆண்மையை அடிப்படையாக கொண்ட தீவிர முயற்சி. (பௌருஷம் அல்லது ஆண்மை, முக்தி அடைய செய்யப்படும் தீவிர முயற்சியை குறிக்கும்). தகுந்த முயற்சியால் இவ்வுலகில் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை. பிரம்ம பதவியும் கூட தீவிரமும் ஒழுக்கமும் சேர்ந்த முயற்சியால் அடையப்படும். 
ஆனால் செய்யும் முயற்சிகளை சரியான மார்கத்தை அனுசரித்தும் இடைவிடாமலும் செய்துவர வேண்டும். பலன் சித்திகாவிடில் இதற்கு காரணம், செய்த முயற்சியில் கோளாறே தவிர வேறு காரணமல்ல. தகுந்தபடி முயற்சி இருந்தால் காரியம் கைககூடியே தீரவேண்டும். இதுவே நியதி. இப்படி பலனை அடையும்வரையில், இடைவிடாமல் முயற்சி செய்கிறவர்கள் உலகத்தில் எக்கலாத்திலும் மிகவும் சொற்பம். பெரும்பாலும் ஜனங்கள், காரியம் எடுத்தபிறகு, அதில் ஊக்கம் குறைந்து முயற்சியில் தளர்ச்சி அடைவதாலேயே அதில் அபசயம் அடைகிறார்கள். "சோம்பலே எல்லா ஜனங்களுடைய கஷ்ட நிஷ்டூரங்களுக்கும் காரணம்". உலகத்தில் நாம் பார்க்கும் வலிமை, எளிமை, எல்லாவற்றிற்கும் காரணம் சோம்பலே. உலகமே க்ஷீனதசை (தேய்வு (அ) அழிவு நிலை) அடைவதற்கு காரணம் சோம்பலே.

No comments:

Post a Comment