Wednesday, 5 August 2015

முக்தியும் சம்சாரமும்:-

முக்தியும் சம்சாரமும்:-
எல்லா மகான்களும் விருப்பப்படும் பதவி ஒன்றே. (அது முக்தி ஆகும்). ஆனால் அதை அடையும் மார்கங்களும், அதைப்பற்றிய கொள்கைகளும் பலவாறாக இருக்கின்றன. ஏதாவது ஒரு வழியை கடைபிடித்து அடையவேண்டிய பதவியை அடைந்துவிட்டால் பிறகு எல்லா பேதங்களும் அடிபட்டுப்போய், சாந்தம் ஒன்றே பூரணமாக நிலை நிற்கும். ஆனால் அந்த நிலைமையை அடைந்தபிறகு அதிலிருந்து நழுவாமல் நிலையாக நிற்க வேண்டும்.
இந்த நிலையை அடைய முழு முயற்சியும் செலுத்திச் சம்சாரமாகிய கடலை தாண்டவேண்டும். இந்த சம்சாரத்தில் அகப்பட்டவர்கள் படும் துயரங்கள் எண்ணமுடியாமலிருக்கின்றன. நாம் புராணங்களில் இருந்து அறிந்த கொடூரமான நரக தண்டனைகலெல்லாம் வாஸ்தவத்தில் நமது வாழ்விலேதான் அனுபவிக்கப்படுகின்றன. ஆனால், எவன் இந்த சம்சாரபந்தத்தை ஒழித்து மன அமைதியை அடைகிறானோ, அவன் சம்சாரத்தை அநாயாசமாக நடத்திக்கொள்வான். அந்தச் சம்சாரத்திலும் அவன் சந்தோஷத்தையே அடைகிறான். இங்கே கூடியிருக்கும் மகரிஷிகள் அந்த நிலையை அடைந்தவர்களே. அவர்களே இப்போதும் சம்சாரத்தை நடத்திவந்தும் அதனால் துன்பப்படுவதில்லை.

No comments:

Post a Comment