Wednesday, 5 August 2015

முக்தியை அடையும் உபாயங்கள்:-

முக்தியை அடையும் உபாயங்கள்:-
இந்த நிலையை அடைய பௌருஷத்தால் (விடா முயற்சியால்) தான் முடியும். வேறு யாதோர் உபாயத்தாலும், அதாவது யாத்திரை, கர்ம அனுஷ்டானகள், யோக அப்யாசம், முதலியவைகளால் எல்லாம் முடியாது. சம்சாரத்தில் ஒருவித விரக்தியும், ஆத்ம விசாரத்தில் ஆசையும் ஊக்கமும் இருந்தால் நாளடைவில் ஞானம் சித்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
பிறகு உலக விஷயங்களை யுக்தியோடு ஆராய்ச்சி செய்ய வேண்டும். யுக்தியில்லாமல் மூடத்தனமான ஆராய்ச்சியால் ஒன்றும் கைகூடாது. மூடத்தனத்தை விட கேவலம் வேறு ஒன்றும் இல்லை. இவ்வித சங்கல்பத்துடன் பிரயத்தனத்தை மேற்கொண்டு ஆத்ம விசாரணையில் மனதை செலுத்தவேண்டும். சொந்த முயற்சியுடன் சாஸ்திரங்களை ஆராய்ந்து வருவதும், குரு உபதேசம் பெறுவதும் வெகு சீக்கிரம் பலனை கொடுக்கும்.
1. உலக விஷயங்களை யுக்தியோடு ஆராய்ச்சி செய்வதும்,
2.ஆத்ம விசாரணையில் மனதை செலுத்துவதும்
3.சொந்த முயற்சியுடன் சாஸ்திரங்களை ஆராய்ந்து வருவதும், குரு உபதேசம் பெறுவதும், ஆகிய
இந்த மூன்று உபாயங்களால் நிர்னயிக்கப்படுவது அனேகமாய் சத்தியமாகவே இருக்கும். இவ்வுபாயங்களால் அடையப்படுவது எல்லாப் பொருள்களிலும் எல்லா விஷயங்களிலும் சம திருஷ்டி. அதனால் ஏற்படுவது சாந்தம். இதை அனுபவத்தில் பூரணமாகக் கொண்டுவந்து விட்டால் பிறகு ஆத்ம சித்தியை அடைவது மிகவும் எளிது. சமநோக்கமும் சாந்தமும் இருந்தால் அதற்க்கு ஈடாக இகத்திலாவது பரத்திலாவது ஒரு சந்தோஷமும் போகமும் இல்லை. சாந்தகுணம் உடையவர்களை விஷ்ணுவுக்கு சமமாக சொல்லவேண்டும். ஏனெனில், அவர்களுக்கு இந்த மூன்று லோகத்திலும் தேவை என்பதே இல்லை. இப்படி இருப்பவரைக் காட்டிலும் மேலானவர் யார்?

No comments:

Post a Comment