Wednesday, 30 September 2015

தந்தைக்கு கண்டம் ஏற்படும் காலங்கள்.

தந்தைக்கு கண்டம் ஏற்படும் காலங்கள்.
விதி 01.
லக்கினத்திற்கு 8ல் இருக்கும் கிரகத்தின் தசை நடைமுறைக்கு வந்து 10ல் இருக்கும் கிரகத்தின் புத்தி நடந்தாலும் அல்லது 10ல் இருக்கும் கிரகத்தின் தசை நடைமுறைக்கு வந்து 8ல் இருக்கும் கிரகத்தின் புத்தி நடந்தாலும் தந்தைக்கு கண்டம் ஏற்படும்.
காரணம்.
2ம் மிடம் என்பது மாரகஸ்தானம், 12ம் மிடம் என்பது விரையஸ்தானம். பல பேருக்கு 12ம் மிட தசை புத்திகளில் உயிரை விரையமாக்கியது. ஆக ஒரு ஜாதகர்க்கு அவரின் காலம் முடிந்துவிட்டால் 12ம் மிட தசை புத்தி அவரின் உயிரை விரையாமாக்கிவிடுகிறது.
அதனால் ஒரு ஜாதகத்தில் லக்கினத்திற்கு 8ம் மிடம் மற்றும் 10 மிடம் என்பது தந்தையை குறிக்கும் 9ம் மிடத்திற்கு விரைய மற்றும் மாரகஸ்தானங்களாக வருவதால் ஒருவர்க்கு 8ம் மற்றும் 10ம் அதிபதிகளின் தசை அல்லது புத்திகளிளோ மற்றும் இவ்வீடுகளில் இருக்கும் கிரகங்களின் தசை அல்லது புத்தி நடைமுறைக்கு வந்தால் அச்ஜாதகரின் தந்தைக்கு கண்டம் ஏற்படும்.
உதாரண ஜாதகத்தில் -- கடக லக்கினம்.
குரு தசை செவ்வாய் புத்தி சூரிய அந்திரம்
நடப்பு தசை = குரு. அவர் 10ல் இருக்கிறார்.
புத்தி = செவ்வாய். அவர் 8ல் ராகுவுடன் சேர்ந்து வக்கிர சனியின் பார்வையில் உள்ளார்.
விதி 02.
தந்தைக்காரகன் சூரியன்.
9ம் அதிபதி வலுகுறைந்து அல்லது பாதிப்படைந்து காரகன் சூரியன் வலுவுடன் இருந்தால் தந்தையின் கண்டம் தடுக்கப்படும்.ஆனால் 9ம் அதிபதி கெட்டு காரகன் சூரியனும் வலுவிழந்தால் கண்டிப்பாக தந்தைக்கு கண்டம் விளையும்.
உதாரண ஜாதகத்தில்
அஷ்டவர்க்கத்தில் சூரியன் 16 பரல்கள் மட்டுமே பெற்று லக்கினத்திற்கு 12ல் வக்கிர சனியின் பார்வையில் உள்ளார். ஆக சூரியன் அஷ்டவர்க்கம், லக்கினம், மற்றும் வக்கிர சனியின் பார்வையில் மாட்டிக்கொண்டு தனது பலம் முழுவதையும் இழந்துவிட்டது.
இச் ஜாதகத்தில் 9ம் மிடம் கெடமால் இருக்கிறது ஆனால் நடப்பு தசைகளும் புத்திகளும் 9ம் மிடத்திற்கு சாதகமாக இல்லை என்பதாலும் தந்தைகாரகன் சூரியனும் பலம் பெறாதாலும் இச் ஜாதகர் தனது 25 வயதில் தனது தந்தையை கடந்த 26.08.2015 அன்று இழந்தார் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
விதி 03.
கோள்சாரம்
அன்றைய கோள்சாரம் : முக்கியமானது மட்டும்.
மீனத்தில் மோட்சக்காரகன் கேது.,
கடகத்தில் சுக்கிரன், செவ்வாய்,
சிம்மத்தில் குருவும், சூரியனும்.
கோள்சாரத்தில் 9ம் மிடமாகிய மீனத்தில் மோட்சக்காரகன் கேது இருக்க ஆயுள்காரகன் சனி ராசியில் ரிஷபத்தில் உள்ள 8ம் அதிபதி சுக்கிரனையும், கோள்சாரத்தில் உள்ள சுக்கிரனை தனது திரிகோணப் பார்வையால் பார்த்தும் 9ம் அதிபதி குருவையும் மற்றும் காரகன் சூரியனையும் சிம்மத்தில் வைத்துப் தனது 10ம் பார்வையால் பார்த்து தனது கடமையை நடத்தினார்.
எல்லாம் ஆயுட்காரகன் சனியின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதால் இச் ஜாதகரின் தந்தை இவரது 10ல் இருக்கும் குரு தசையில் 8ல் இருக்கும் செவ்வாய் புத்தியில் லக்கினத்திற்கு 12ல் இருக்கும் தந்தைக்காரகன் சூரியன் அந்திரத்தில் இறந்தார்.

No comments:

Post a Comment