Wednesday, 30 September 2015

மலை தேன்

மலை தேன் குறித்த ஜோதிட சூட்சுமங்கள்
பொதுவாக தேன் பல விதங்களில் நன்மை செய்ய கூடியது. தாந்த்ரீக பரிகாரமாக ஒரு பாட்டில் தேனை வியாபார ஸ்தலத்தில் வைத்திருக்க வியாபாரம் நல்ல முன்னேற்றம் காணும். இது பற்றி ஏற்கனவே நாம் ஒரு பதிவில் குறிப்பிட்டு உள்ளோம்
.உண்மையான கோரோசனை அல்லது கஸ்தூரியோடு மலை தேன் கலந்து நெற்றியில் இட்டு வர வசிய சக்தி ஏற்படும். பலர் தொடர்ந்து உண்மையான மலை தேன் குறித்து கேட்டு வரவே, தற்போது கேரளாவில் இருந்து தருவிக்கப்பட்டு உள்ளது. தேவை உள்ளோர் : +919840130156 அழைக்கவும்
.
இப்பொழுது மலை தேனின் மற்ற பயன்களை பார்போம்.
செவ்வாய் : ஜாதகத்தில் செவ்வாயினால் ஏற்படும் குறைவை அதாவது உடல் ரீதியான கோளாறுகளை தீர்க்க தொடர்ந்து ஒரு தேக்கரண்டி தேன் அருந்தி வருதல் நலம் பயக்கும்.
குரு: ஜாதகம் அல்லது கோட்சாரத்தில் குருவின் நிலை திருப்தி தரும் படி இல்லையெனில் தொடர்ந்து வியாழக்கிழமைகள் தேன் தானம் செய்து வர குருவினால் ஏற்படும் பாதகங்கள் குறையும்.
ராகு மற்றும் கேது : இவ்விரு சாயா கிரகங்களினால் ஏற்படும் தோசத்தை / சேதத்தை தடுக்க சிவனுக்கு மலை தேன் அபிஷேகம் செய்வித்தல் ஒரு நல்ல பலனை ஏற்படுத்தும்.
சூரியன் : சூரியன் ஜாதகத்தில் வலுவிழக்கும் சமயம் நம் உடலில் வயிற்று கோளாறுகள் ஏற்படும்-இதை போக்க சூரியனை நம் உடலில் வலுப்படுத்த மலை தேன் தொடர்ந்து உண்டு வரலாம்.
வாதம் (சனி) பித்தம் (சூரியன்) கபம் (குரு) : நம் உடலில் இம்மூன்றையும் சமன்படுத்த தினசரி காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் மலை தேன் குடித்து வரலாம்.இது வடக்கே ஜோதிடர்கள் தங்களிடம் ஆலோசனைக்கு வரும் அனைவரிடமும் கூறும் ஒன்றாகும்.
கோபம் குறைய : தினசரி காலை சிறிது வெங்காய சாரோடு மலை தேன் கலந்து உண்டு வர தேவை இல்லாத கோபங்கள் அடங்கும்-இரத்த கொதிப்பு இருப்பின் சமன்படும்

No comments:

Post a Comment