Wednesday, 30 September 2015

ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும்

கலியுகத்தில் மிக பலம் பெற்றவர்கள் ஸ்ரீ ராகு பகவானும் ஸ்ரீ கேது பகவானும். அவர்கள் தயவு இல்லாமல் இப்பூலோகத்தில் யாரும் மிகப் பிரபலமோ மிகப் பெரிய மனிதர்களோ ஆக முடியாது.
உலக அழகிப் பட்டம் பெற்று இந்திய சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்த ஒரு நடிகையின் ஜாதகத்தில் நான்காம் இடத்தில் சுக்கிரனை கூடி பத்தாம் இடத்தை பார்வை செய்து ராகு பகவானே இந்த அதிசயத்தை நிகழ்த்தினார்.
மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் ஒரு பெரும் தலைவரின் ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் இடத்தில் இருந்த ராகு பகவானே அவருக்கு அற்புத பேச்சாற்றலை கொடுத்து தமிழக மக்களின் அன்புக்கு பாத்திரமாக்கினார்.
தமிழக சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரும் இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரராக இருந்து எண்ணிலடங்கா சாதனைகளுக்கு சொந்தக்காரரும் ஆகி ஒய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவரும் கால சர்ப்ப யோகத்தில் பிறந்தவர்களே.
இந்தி சினிமாவில் பெரும் பிண்ணணிப் பாடகியாய் விளங்கி கலைத்துறைக்கே தன்னை அர்ப்பணித்து தேன் குரலினால் பல ஆண்டுகள் மக்களை கட்டிப்போட்டவரின் ஜாதகமும் கால சர்ப்ப யோகம் பெற்றதே.
தமிழில் திரை இசையில் கோடிக்கணக்கான உள்ளங்களை மயக்கி வைத்திருக்கும் இசையமைப்பாளர் ஒருவரின் ஜாதகமும் காலசர்ப்ப தோஷ ஜாதகமே.
எண்பதுகளில் எதார்த்தமான நடிப்பினாலும் திரை காட்சிகளை சுவாரசியமாக அமைப்பதில் வல்லவர் என்றும் அரும் பெரும் நடிகராக இருந்து இன்றும் மக்களின் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைவரின் நேரடி திரையுலக வாரிசாக அறிவிக்கப்பட்ட ஒரு நடிகரின் ஜாதகமும் கால சர்ப்ப தோஷமே.
இப்படி இன்னும் எத்தனையோ உதாரணங்கள். அனைத்து துறைகளிலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் பெரிய மனிதர்களின் ஜாதகத்தில் ராகு மற்றும் கேது பகவான்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.
அப்படி ராகு மற்றும் கேது பகவானை அனுதினமும் வணங்கி அவருக்கு உரிய பிரீதிகள் செய்து வாழ்வில் நாமும் நல்ல நிலையை அடைவோம்.

No comments:

Post a Comment