Monday, 2 November 2015

மனம் அது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் ...

மனம் அது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் ...
மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்ற ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. "மனம் செம்மைப்படும் போது' என்பதையும் கவனிக்க வேண்டும். செம்மைப்படுவது என்பது ஆசாபாசங்கள் என்னும் அழுக்குகள் நீங்கி தூய்மை அடைவது என்று பொருள்.மந்திரம் ஜபிப்பது ஒன்று தான் வழி. இப்படி அதிகமான ஜபங்கள் செய்து மனதிலுள்ள இருள் நீங்கும் போது ஏற்படுவது தான் "மனமது செம்மையாதல்' எனப்படும். அதாவது வேறு எந்த விருப்பங்களும் இல்லாமல் இறைவனுடைய திருவடிகளை அடைவது ஒன்றே போதும் என்ற நிலையை மனம் முழுமையாக அடையும் போது, விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுப்பதாகிய மந்திரங்களை(காமிய மந்திரங்களை) ஜபிக்கும் அவசியம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, செம்மையடையும் வரை மந்திரம் ஜபிக்க வேண்டும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்- மனம் அது செம்மையாக மந்திரம் ஜெபிக்க வேண்டும். அதாவது மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை அதீத சிரத்தையுடன் ஜெபிக்கும் போது மனம் அடங்கி போகும். அதாவது மனம் முழுதும் மந்திரத்திலேயே கவனமுடன் இருப்பதால் வேறு விசயங்களை மனம் என்னாது மனம்அடங்கிவிடும் இதற்கு தான் 108, 1008 முறைகள் என்று மந்திரங்களை உச்சரிக்க அறிவுறுத்தபடுகிறது. இப்படி செய்யும் போது தியானத்தில் நடப்பது போன்ற சுழுமுனை சுவாசம் நடக்கும் நினைத்தது நிறைவேறும்.

No comments:

Post a Comment