Monday, 2 November 2015

விதுரநீதி .....

விதுரநீதி .....
சொர்க்கத்துக்கு செல்லும் எட்டு பேர்கள்.
1. பெரியோர் உபதேசத்தை கேட்பவர்கள்.
2. நீதி தெரிந்தவர்கள்.
3. கொடுக்கும் குணம் உள்ளவவர்கள்.
4. கடவுளுக்கு படைத உணவையே
உண்பவர்கள்.
5. பிறரை ஹிம்சிக்காதிருப்பவர்கள். பிறரை
மனத்தாலோ, உடம்பாலோ அல்லது
சொல்லாலோ ஹிம்சிக்காதவர்கள்
சொர்க்கத்தை அடைவார்கள்.
6. உலகத்தில் ஒருத்தருக்கும் தீங்கு
செய்யாதவர்கள்.
7. செய்நன்றி மறக்காதவர்கள்.
8. சத்தியமே பேசுபவர்கள்.
தள்ளி வைக்க வேண்டிய பத்து பேர்
1. கள் குடித்து போதையில் வெறி பிடித்தவன்.
2. எதையுமே கவனமின்மையால் தப்பு
தப்பாகவே செய்பவன்.
3. பைத்தியம் - இவனால் ஒரு பிரயோஜனமும்
இல்லை.
4. களைத்தே காணப்படுபவன் - எந்த வேலை
சொன்னாலும் கை சரியில்லை, கால்
சரியில்லை என்று ஏதாவது காரணம்
சொல்லுபவன். இவனாலும் ஒரு
பிரயோஜனமும் இல்லை.
5. கோபப்படுபவன். - எதற்கெடுத்தாலும்
கோபம் அடைவதால் எந்த நன்மையையும்
கிடைக்காது. மூளைதான் மழுங்கிப் போகும்.
6. பெரும் பசியாளன் - எப்போதும்
எதையாவது சாப்பிட்டுக் கொண்டே
இருப்பவன். இவனாலும் ஒரு நன்மையும்
இல்லை.
7. பதட்டத்தில் அவசரமாக எந்த செயலையும்
செய்பவன். இவன் செய்த வேலையில் சுத்தம்
எப்போதுமே இருக்காது.
8. எதையும் யாருக்கும் கொடுக்காமல் தானே
அனுபவிப்பவன். - இவனுக்கு பிறவி
விமோசனமே கிடைக்காது.
9. எல்லாவற்றிற்கும் ஆசைப்படுபவன். -
இவனது கவனம் பொருட்களின் மீதே இருக்கும்.
10. எதற்கெடுத்தாலும் பயப்படுபவன். - எந்த
செயலை செய்ய மாட்டான். பயந்து கொண்டே
இருப்பான். இவனாலும் ஒரு பிரயோஜனமும்
கிடையாது.
ஆக இந்த பத்து பேரையும் தள்ளி வைக்க
வேண்டும.

யார் ரூபம் எப்போது வெளிப்படும

தங்கத்தின் தன்மை - நாம் வைத்திருக்கும்
தங்கம் உண்மையான தங்கமா என்று அதை
காய்ச்சும்போதுதான் தெரியும் அதுவரை
தெரியாது.
சத் புருஷன் - ஒருவான் சத்புருஷன் என்றால்
அவனது ஆச்சார அனுஷ்டதில் தான் தெரியும்.
அவன் தான் சத் புருஷன் என்று தெரிவித்துக்
கொண்டாலும் உண்மையான சத் புருஷன்
என்பது அவனது நடத்தையில் தெரிய வந்து
விடும்.
சாது - ஒருவன் சாது என்று சொல்லிக்
கொண்டாலும் சாது போன்று உடை அணிந்துக்
கொண்டாலும் அவரது பேச்சில் அவர் சாதுவா
சாது இல்லையா என்று தெரிந்து விடும்.
உடை சாது வாக இருந்தாலும் அவர் பேச்சு
வேறுமாதிரி இருந்தால் அவர் சாது இல்லை
என்று தெளிவாக தெரிந்து விடும்.
சூரன் - ஒருவன் தன்னை சூரன் என்று
சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அவனுக்கு
பயம் வந்தால் அவன் சூரன் இல்லை என்பது
வெளி உலகிற்கு தெரிந்து விடும்.
தைரியமிக்கவன் - தன்னை தைரியசாலி என்று
சொல்லிகொல்பவன் உண்மையான தைரியசாலி
இல்லை என்றால் அவனது காசு தொலைந்து
விட்டால் உண்மை வெளிப்பட்டு விடும்.
தைரியசாலி என்றால் தனது சொத்து
தொலைந்தாலும் அதை மீண்டும்
சம்பாதிர்க்கும் வரை தைரியாமாகவே
இருப்பான்.
நமக்கு வேண்டியவர்கள் என்று சொல்லிக்
கொள்ளுபவர்கள் - நமக்கு ஆபத்து வந்தால்
நமக்கு யார் வேண்டியவன் யார் வேண்டதாவன்
என்ற உண்மை வெளிப் பட்டுவிடும். நம்மிடம்
காசு தொலைந்து விட்டாலோ நமக்கு ஆபத்து
வந்து விட்டாலோ நம்மிடம் ஒட்டிக் கொண்டு
இருந்தவர்கள் நாம் அருகில் இருந்து உதவி
புரியா விட்டால் அவர் நம்மிடம் ஏன் இருந்தார்
என்ற உண்மை தெரிந்து விடும்

No comments:

Post a Comment