Friday, 27 November 2015

நவபாஷாணம் என்றால் என்ன?

பாஷாணங்கள்

நவபாஷாணம் என்றால் என்ன?

சித்த மருத்துவத்தின் அடிப்படை மூலங்களில் ஒன்றுதான் பாஷாணங்கள். ஆனால் பாஷாணம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பழநியில் அருள்பாலிக்கும் மூலவரான தண்டாயுதபாணியும், அவரை உருவாக்கிய சித்த புருஷரான போகரும்தான். ஒன்பது வகையான பாஷாணங்களை பிசைந்து பழனியில் உள்ள மூலவரை போகர் உருவாக்கியதாக கூறுவர். இந்த பதிவின் நோக்கம் நவபாஷாண சிலை பற்றியதன்று. இத்தனை சிறப்பானதாக கூறப் படும் பாஷாணங்களைப் பற்றியதே....

பாஷாணங்கள் அல்லது பாடாணங்கள் என அறியப் படும் இவற்றை சித்தர்கள், தங்களின் மருத்துவ முறையில், அடிப்படை மூலகங்களில் ஒன்றாக பயன் படுத்தினர். இரசவாதத்திலும் பாஷாணங்கள் பயனாகிறது. இவை உலோகத்தைப் போல கடினமான தன்மையையும், விஷத்தின் தீவிர குணங்களையும் கொண்ட திண்மப் பொருட்கள். பாஷாணம் என்பது பொதுப் பெயரே, இவற்றில் நிறைய வகைகள் இருக்கிறது.

இந்த பாஷாணங்கள் விஷத் தன்மையுடையவை ஆதலால், நேரடியாய் உட்கொண்டால் மரணம் விளையும், ஆனால் அன்றைக்கே சித்தர்கள் அவற்றை பக்குவப் படுத்தி விஷத்தையே மருந்தாக்கி பயன்படுத்தினர். இன்றைய நவீன அலோபதி மருத்துவ முறை, பெரும் செலவிலான ஆராய்ச்சிகளின் முடிவில் பாம்பின் விஷத்தை மருந்துகளாக மாற்றி பயன்படுத்துவது உங்கள் நினைவுக்கு வரலாம். சித்தர் பெருமக்கள் நமக்குத் தரும் ஏராளமான ஆச்சர்யங்களில் இதுவும் ஒன்று.

பாடாணங்கள் குறித்து மிகைப் படுத்தப் பட்ட செய்திகளே ஊடகத்தில் உலவுகின்றன. இந்த செய்திகள் எங்கிருந்து பெறப்படுகின்றது என்பதில் நிறைய கேள்விகளும், ஐயங்களும் இருக்கிறது. ”போகர் 12000” என்ற நூலில் போகர் பாடாணங்கள் குறித்து விளக்கமாய் கூறியிருக்கிறார். போகரின் கூற்றுப் படி பாஷாணங்கள் அடிப்படையில் இரு வகையாக பிரித்துக் கூறுகிறார். அவை “பிறவிப் பாஷாணங்கள்”,”வைப்புப் பாஷாணங்கள்” ஆகும்.

பிறவிப் பாஷாணங்கள் என்பவை இயற்கையாக கிடைக்கக் கூடியவை. வைப்புப் பாஷாணங்கள் என்பவை பல மூலகங்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கப் படுவது. இந்த இரு பிரிவுகளின் கீழ் பல வகையான பாஷாணங்கள் உள்ள்ளன

No comments:

Post a Comment