Wednesday, 23 December 2015

திருமண வரம் தரும் ராகு வழிபாடு

திருமண வரம் தரும் ராகு வழிபாடு
நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டு வரும் பெண்கள் கீழ்க்கண்ட ராகு வழிபாட்டை செய்து விரைவில் திருமணம் கூடிவரப் பெறலாம். திருமணம் ஆகாத பெண்கள் ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட வேண்டும். இவ்வாறு செய்து வர அப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடிவரும்.
திருமண வாழ்க்கையில் பிரச்சினையைக் காண்பவர்கள் அப்பிரச்சினையில் இருந்து விடுதலை பெற வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் (காலை 10.30 - 12 மணி வரை) தீபம்ஏற்றி வணங்குதல் வேண்டுëம். இவ்வாறு 11 வாரம் செய்து முடித்த பிறகு 12-வது வாரம் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டினை செய்ய திருமண வாழ்வில் தம்பதியினருக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும். திருமண வரம் கூடி வந்தவுடன் காணிக்கையாக 108 எலுமிச்சம் பழத்தை மாலையாக்கி அம்மனுக்கு சாற்றலாம். அதேபோல் தம்பதிகள் மேற்கண்ட வழிபாட்டை செய்து தங்கள் பிரச்சினை தீர்ந்தவுடன் அரக்குக் கலர் பட்டுப் பாவாடை சாற்றலாம்.
ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும். பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும். எண்ணெய் ஊற்றும் போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும். ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும்.
சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என பொருள்.

No comments:

Post a Comment