Wednesday, 23 December 2015

வீட்டில் பண வரவை அதிகரிக்க அவசியம் செய்ய வேண்டியவை !

வீட்டில் பண வரவை அதிகரிக்க அவசியம் செய்ய
வேண்டியவை !
வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண்ட் கல்லை போட்டு ஏற்றினால் லட்சுமிகடாஷம் ஏற்படும்.
வீட்டில் வெள்ளை புறாக்கள் வளர்த்தால் பணத்தட்டுப்பாடு நீங்கும்.
நமது வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு முதலில் தண்ணீர் கொடுத்து, பிறகு மஞ்சள் குங்குமம் கொடுத்தல் ஜென்மஜென்மாந்தர தரித்திரம் தீர்ந்து பணவரவு ஏற்படும்.
அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது, தலைக்கு எண்ணை வைக்க கூடாது, பூஜைகளை காலைப்பொழுதில் செய்யக்கூடாது, பித்ருக்களை மட்டும் வழிப்பட பணம் வரும்.
வீட்டில் விளக்கேற்றிய பிறகு பால், தயிர், மோர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகளை வீட்டை விட்டு வெளியேற்றினால், பணமும் வெளியேறி விடும்.
அபிஜீத் நட்சத்திரத்தில் பகல் 12 மணிக்கு அரவாணிக்கு திருப்திகர உணவளித்து அவள் கையால் பணம் பெற வீட்டில் பணம் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.
பசுவின் கோமியத்தில் சிறிதளவை குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும். வீட்டிலும் தெளிக்கவும். இப்படி தொடர்ந்து 45 நாள் செய்து வர தரித்திரம் தீர்ந்து பணவரவு அதிகரிக்கும்.
முழு பாசிப்பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊறவைத்து பின் அதை பறவைக்கும், பசுவிற்கும் அளித்திட பணத்தடை நீங்கும்.
வெள்ளிக்கிழமை அன்று பொருமாள் கோவில் தாயாருக்கு அபிஷேகம் செய்ய பசும்பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிந்திட தனாப்பிராப்தி அதிகரிக்கும்.
பசும்பாலை சுக்கிர ஓலையில் வில்வ மரத்திற்கு தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமை ஊற்றி வர நிச்சியமாக பணம் வரும்.
தினமும் குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி பின் சிறிது நேரம் கழித்து குளித்திட தரித்திரம் விலகும்.
தினமும் குளித்தவுடன் ஆண் பெண் இரு பாலரும் முதலில் முதுகை துடைக்க தரித்திரம் விலகும்.

No comments:

Post a Comment