Thursday, 3 December 2015

ஜோதிட சூச்சும பரிகாரங்கள்

ஜோதிட சூச்சும பரிகாரங்கள்
திருவோணம் அன்று விஷ்ணுவை துளசி மாலை போட்டு துவரம் பருப்பு பாயசத்தினால் நிவேதனம் செய்து அதை தானம் செய்து வர நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். தீருவீழிமலை சென்று படிக்காசு வைத்து வணங்கி வர பண வருவாய் அதிகரிக்கும்.

திருவாதிரை அன்று சிவனை வணங்கி விட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால், பல வருடங்களாக தீராத நோயும் எளிதில் குணமாகும்.
வறுமை நீங்க ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட சுபிட்சம் பெறலாம்.

பிறரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மிருகசீஷ நட்சத்திரத்தில் முருகரை வழிபட்டு பின் சென்று கேட்டால் கட்டாயம் கிடைக்கும்.
எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்-

(1) சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கடன்,பொன்,பொருள் எதுவும் கொடுக்க கூடாது. கொடுத்தால் திரும்பி வராது. கண்டிப்பாக கடனாளி ஏமாற்றி விடுவார்.

(2) கணவன் அன்பாக நடந்து கொள்ள விசாக நட்சத்த்திரத்தில் மனைவியானவர் விரதமிருந்து முருகரையும்,வள்ளி யையும் வழிபட கணவரின் அனுசரணையும் அன்பும் பெருகும்.திருமணமாகாத பெண்கள்,நல்ல கணவன் அமையவும் இப்படி செய்யலாம்.
(3) நீண்ட கால நோய்களுக்கு பரிகாரம், மரண பயத்திற்கு பரிகாரம், மற்றும் ரகசிய ஒப்பந்தங்களில் ஈடுபட, மாந்திரீகம் கற்க கேட்டை நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கலாம்.

(4) எதிரிகளை வெற்றி கொள்ள, ஏவல், பேய், பில்லி சூனியன்களில் இருந்து விடுபட பரிகாரங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் செய்ய உடனடி பலன் உண்டு.

 (5) அரசியலில் வெற்றி அடைய, அரசு வேலைகளில் உயர் பதவி அடைய திருவண்ணாமலையரை தொடர்ந்து 3 மாத காலம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்

1 comment: