Saturday, 23 January 2016

ஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் தீமை

வசியத்தில் இருந்து தப்பிக்க ... நம்
முன்னோர்கள் கடைபிடித்த
நுட்பமானஅறியியலும் , ஸ்டிக்கர் பொட்டால்
பெண்களுக்கு ஏற்படும் தீமைகளும்
---------------------------------------------
------------------------
அவசியம் படிக்க தவறாதீர்கள் .......
வசியத்தில் இருந்து தப்பிக்க குங்குமம்
வைங்க
இந்திய கலாச்சாரத்தில் பெண்கள்
குங்குமப்பொட்டு வைத்துக்கொள்வது
மங்களமானதாக கருதப்படுகிறது.
அது அழகுத் தொடர்பானதும் கூட. மஞ்சளால்
உருவாக்கப்பட்ட தூய்மையான குங்குமத்தை
தான் வைத்துக்கொள்ள வேண்டும்.
குங்குமத்தை கழுத்தில் உள்ள கண்டம்,
புருவத்தின் இடைப்பகுதி, நெற்றியின் உச்சி
போன்ற இடங்களில் வைத்துக்கொள்வார்கள்.
அப்படி பொட்டு வைப்பதற்கு பல காரணங்கள்
உள்ளன.
வசியத்தில் இருந்து தப்பலாம்.
வசியம் என்பது ஒரு கலை. இந்நாளில்
மெஸ்மரிசம், ஹிப்னாடிசம், போன்றவை
வழக்கத்தில் உள்ளன. மற்றவர்களை
வசியப்படுத்தும் போது தம் பார்வை
ஆற்றலை செலுத்த கண்டம், புருவத்தின்
இடைப்பகுதி, வகிட்டு நுனி, கழுத்தின்
பின்பகுதி ஆகிய இடங்களைத் தேர்ந்தெடுக்கின
்றனர்.
கழுத்தின் பின்பகுதி சடையால்
மறைக்கப்படுகிறது. ஏனைய பகுதிகளில்
பொட்டு வைத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது.
இதில் புருவ இடைப்பகுதி மிக முக்கியமாகும்.
இந்த இடத்தில் பொட்டு வைத்துக்கொண்டவர
்களை அவர்கள் சம்மதம் இன்றி, எவராலும்
ஆழ்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது;
வசியப்படுத்த முடியாது.
யோகசாஸ்திரம் கூறும் உண்மை
---------------------------------------------
-------
மூலாதாரம் என்று சொல்லப்படும் பகுதியில்
இருந்து பிறக்கும் உள் ஒளி கண்டத்தில்
தங்குகிறது. அவ்வொளி கபாலம் மூலம்
புருவ மத்திக்கு வருகிறது. அகவொளி
நிலைக்கும் இடங்களைப் பொட்டு வைத்து
புலப்படுத்துவதாக சாஸ்திரங்கள்
தெரிவிக்கின்றன.
பெண்கள் அனைவரும் பொட்டு
வைத்துக்கொள்ள வேண்டும்.
திருமணமானவர்கள் என்பதை வித்தியாசப்படுத
்திக் காட்ட வேண்டும் என்பதற்காக வகிட்டில்
வைத்துக்கொள்வது மரபு. ஒட்டுப்
பொட்டுக்களை இட்டுக் கொள்ளுதல்
சாஸ்திரத்திற்கு முரனானது ஆகும்.
ஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும்
தீமைகள்....
---------------------------------------------
-------------------------------------------
முன்னோர்கள் ஏன் பெண்கள் மஞ்சளை
தேய்த்துக் குளித்து குங்குமம் வைக்க
வேண்டும் என்று சொன்னார்கள் தெரியுமா?
பெண்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட
மங்கலம் பொருந்திய குங்குமம் தற்போது
ஏற்பட்டுள்ள கலாச்சார சீரழிவால் ஸ்டிக்கர்
பொட்டாக மாறி பெண்களை மட்டும் அல்ல
எதிர்கால சந்ததிகளையே கேள்விக்
குறியாக்கியுள்ளது நடு நெற்றியில் உள்ள
லலாட மத்தியை (புருவமத்தி என்றும்
அழைக்கப்படும்) நெற்றிக்கண் என்றும்
அழைக்கப்படும். பழங்காலத்தில்
மந்திரவாதிகள்,ஆண்களையும் பெண்களையும்
வசியம் செய்து மயக்கி கொண்டு செல்ல
நெற்றியின் நடுவே இருக்கும் ஆக்கினைச்
சக்கரத்தின் மூலமாகவே வசியம் செய்யும்
சக்தியை செலுத்துவார்கள். மேலும் அந்த
பொட்டு வைக்கும் இடம் பீனியல் மற்றும்
பிட்யூட்டரி சுரப்பிகளின் கட்டுப்பாட்டு
புள்ளியாக அக்குபங்சரில் பயன்படுத்தப்படு
கிறது.மேலும் அந்தப் புள்ளியை சித்தர்கள்
திலர்த வர்மம் என வர்மப்பிரிவில்
குறிப்பிடுகின்றனர்.யோக சாதன முறைகளில்
இதை ருத்ரக்ரந்தி என அழைக்கப்படுகிற்து.
படத்தில் காண்க. `
ஆக்கினைச் சக்கரம் என்றால் கட்டளையிடும்
சக்கரம் என்று பொருள்.இந்த ஆக்கினைச்
சக்கரத்தால்தான் ஹிப்னடிசம் , மெஸ்மரிசம்,
மனோவசியம் என்ற அறிதுயில், ஏன்?
செய்வினை, ஏவல்,பில்லி சூன்யம் (Phychic
Attacks & Evil Spirits Attachments)
போன்றவற்றையும் செயல்படுத்த படுகிறது.
மேலும் clairvoyance என்ற தொலைவில்
உணர்தல் போன்றவற்றிற்கும்,அதிகமாக
உணர்ச்சிவசப்படுவதால் ஏற்படும்
நோய்களைக் களையவும்,வந்த நோய்களை
கட்டுப்படுத்தவும் இந்த ஆக்கினைச் சக்கரம்
நல்ல நிலையில் இருப்பது அவசியம்
ஆக்கினைச் சக்கரம் யோக சாதன
முறைகளிலும் முக்கிய இடத்தை வகிக்கிற்து.
தியானமுறைகளின் மூலமாக முக்தியை
அடைவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பெண்களை இது போன்ற
தொல்லைகளிலிருந்து காப்பாற்றவும்
ஏற்படுத்தப் பட்டதே இந்த மங்கலம்
பொருந்திய குங்குமம்.
மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம்
பழசாற்றில் ஊறவைத்து, பின் உலர வைத்து
பொடிசெய்தால் குங்கமம் தயாராகும். (சிலர்
வெண்காரத்தையும் நன்றாக ஒட்டுவதற்காக
நல்லெண்ணெயும் சேர்ப்பார்கள்)
பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து சுரக்கும்
சுரப்பி நீர்கள் உடலிலுள்ள நாளமில்லாச்
சுரப்பிகளுக்கு கட்டுப்பாட்டுக் கட்டளைகளை,
இரத்தத்தில் வேறு வேறு வகையான சுரப்பு
நீர்களை கலப்பதன் மூலம் செயல்படுதுகிறது.
மேலும் அந்த சுரப்பிகளின் செயல்பாடுகளைக்
கண்காணிக்கிறது.சுருக்கமாகச் சொன்னால்
உடலின் முழு செயல்பாடும் பிட்யூட்டரி
சுரப்பியின் கட்டளையின்படியே நடக்கும்
பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து சுரக்கும்
சுரப்பி நீர்களுள் ஒன்று TSH (THYROID
STIMULATING HARMON)தைராய்டு சுரப்பியை
செயல்படுத்த வைக்கும்.தைராய்டு
சுரப்பியில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்கள்
இரண்டும்(T3,T4) பெண்களின்
மாதாந்தரவிலக்கை(MONTHLY PERIODS)
நிர்ணயம் செய்கிறது. இதே சுரப்பு நீர்கள்தான்
ஒரு பெண்ணை முழுமையான பெண்ணாகவும்
வைத்திருக்கும் எஸ்ட்ரோஜன் (ESTROGEN)
சுரப்பையும் நிர்ணயம் செய்யும்.
தற்போதுள்ள நிலையில் தைராய்டு சுரப்பி
பிரச்சினைகளுக்கு எல்ட்ராக்ஸின் போன்ற
மருந்துகளை ஆயுள் முழுவதும் சாப்பிட்டுக்
கொண்டே இருக்க வேண்டும்.இதன்
பின்விளைவுகள் என்னென்ன என்று இங்கு
சொல்லாமல் விடுகிறேன். எஸ்ட்ரோஜன்
(ESTROGEN) சுரப்பு குறைவதாலும்
உடலுக்கு குளுமை தரும் மஞ்சளை தேய்த்துக்
குளிக்காததாலும் உடலெங்கும் ரோமம்
அதிகமாக வளர்ந்து பெண்கள், ஆண் தன்மை
கூடுவதால் மலட்டுத் தன்மைக்கும் ஆளாக
நேரிடுகிறது.
இதனால் எதிர்கால சந்ததிகள் பிறப்பதே
கேள்விக்குறியாகி உள்ளது. எனவே ஸ்டிக்கர்
பொட்டை தவிர்த்து குங்குமம் இட்டு மங்கலம்
காப்பதுடன் நம் நலமும் காப்போம்.

No comments:

Post a Comment