Saturday, 30 January 2016

இன்சுலின் செடி :

இன்சுலின் செடி :
மூலிகையின் பெயர் -: இன்சுலின் செடி.
தாவரப்பெயர் -: காஸ்டஸ் பிக்டஸ்
PLANT FAMILY: Costaceae
BOTANICAL NAME: Costus இக்நேஉஸ்
பயன் தரும் பாகம் -: இலை.
மருத்துவப் பயன்கள் :
சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள்.
இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study
தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது.ANTI_Diabetic herb.
பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள்.

1 comment:

  1. எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சர்க்கரை நோயைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதுவது, வேடிக்கை
    யைத் தருகிறது. உடம்பில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது, இல்லை
    யேல், சர்க்கரை சத்து குறைவாக இருக்
    கிறது என்று பிதற்றல். இந்த நோய் வருமுன், உடம்பு, அதிகமாக பெருக்கும். அப்போதே நாம் கொஞ்சம் உஷாராக, நடைப்பயிற்சி எடுத்துக்
    கொண்டு, இனிப்பு பதார்தங்களை குறைத்து, சீனி போட்டு காப்பி அருந்துவதை நிறுத்தி, சாப்பிட்டவுடன் உறங்கும் பழக்கத்தை தவிர்த்து விட்டால்
    நம்மிடம் சர்க்கரை நோய் நெருங்காது. சர்க்கரை நோய் வந்து விட்டான், சிறியாநங்கை இலை இரண்டு எடுத்து வாயில் மென்று சாப்பிடலாம். சீசனில் அதலக்காய் சாப்பிடலாம். அதிகாலை ஒருநாள், கஞ்சி தண்ணியில் வெந்தயம் ஊற வைத்து, அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம்
    நாவல்கனி மிகவும் சிறந்தது. பாகற்காய் ஒருநாள், முருங்கைக்கீரை ஒருநாள் என்று ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டே வந்தால் போதுமானது. மருத்துவரிடம் காண்பித்தால், உடனே மாத்திரை, ஊசி என்று சிறிய அளவில் இருப்பதை பெரிதுபடுத்தி, நிரந்தர நோயாளியாகி விடுகிறார்கள். சுகர் உள்ளவர்கள், தினமும் ஆற்றிலோ, செம்புப் பானைத் தண்ணீரிலோ குளித்தால், உடல் அசதி, இருக்காது. இரண்டாவது, உறக்கம் வந்தாலும், உறங்காதீர்கள். எப்போதும்,எதையாவது
    சாப்பிட்டுக் கொண்டே இருக்காதீர்கள். கால், கை நகங்களை சுத்தமாக, உலர விடாமல் எண்ணெய் தேய்த்து பராமரியுங்கள். உடம்பில் ஏதேனும் புண் வந்துவிட்டால், உடனே ஆற்றி விடுங்கள். காயங்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது சாலச்சிறந்தது. அதிகாலை, கண்டிப்பாக சிறிது நேரம் நடைப் பயிற்சி வேண்டும். கொழுப்பு ஆகாரங்கள் உணவில் வேண்டவே வேண்டாம். எல்லாக் காய்களும் சாப்பிடலாம், ஆனால் வயிறு நிரம்ப சாப்பிடாதீர்கள். சுகர் உண்டு, என்ற சிந்தனையை மறந்து, அன்றாட வேலையை செய்யுங்கள். வாழைப்பழத்தில் நாட்டுப் பழம் மட்டும் சேர்க்காமல், மீதி அனைத்துப் பழங்களும் சாப்பிடலாம். மாலை நான்கு மணிக்கு மேல், பழங்கள் சாப்பிடுவதை நிறுத்துங்கள். சிலருக்கு
    உடம்பில் சோப்பு, அலர்ஜியை கொடுத்தால், கடலைமாவை உடம்பில் தேய்த்துக் குளிக்கலாம். தேங்காயை உடைத்த உடன் ஒரு சில் தேங்காய் சாப்பிடுங்கள். தினமும் ஆப்பிள் ஒரு துண்டு சாப்பிடுங்கள். ஆனால் வயிறு குறைவுடனே இருக்க வேண்டும்
    ஆங்கில மருந்து எடுத்துக்கொண்டால் கிட்னி பாதிப்படைவதாக நம்பப்படு
    கிறது.மேற்கூறியவற்றை கடை
    பிடியுங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். பனங்கிழங்கு கருப்புக்கட்டி, முட்டைகோஸ், வெண்டைக்காய் என்று பச்சை காய்கறிகள் உணவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.தினமும் கடைபிடியுங்கள், என்றும் நலமாக இருக்கலாம்.

    என்றும் நட்புடன் Jansi kannan

    ReplyDelete