Saturday 30 January 2016

ஜீவன் முக்தி...!

ஜீவன் முக்தி...!
பலரையும் எதோ பிரம்மிப்பிலும், பயத்திலும், தேடலிலும் ஆழ்த்தும் ஒரு சொல்."ஜீவன் 
முக்தி".
ஜீவன் முக்தி என்றால் என்னவென்றே தெரியாமல் திரிபவர் பலர். ஜீவன் முக்தி 
என்றால், 
ஜீவித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது உயிருடன் இருக்கும்போதே முக்தி 
அடைவது என்பது தான் பொருள்.
என்னது உயிருடன் இருக்கும்போதே முக்தியா?
அது எப்படி?

முக்தி என்றால் செத்தபிறகு வைணவரானால் வைகுண்டதிற்கும், சைவர்கலானால் 
கயிலாயதிர்க்கும் சென்றால்தானே முக்தி. அதெப்படி வாழும்போதே முக்தி? 
என்கிறீகளா!!

முதலில் முக்தி என்றால் என்னவென்று தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முக்தி என்பது ஒரு வடமொழிச் சொல். 

அதற்கு தமிழில் "விடுதலை" என்று பொருள்.

எதில் இருந்து விடுதலை?

நம் மனதில் இருந்துதான்!!!

இப்பிரபஞ்சத்தில் நாம் நம் மனதைத் தவிர வேறு எதற்குமே அடிமையாக 
இருக்கவில்லை.
நம்மை, நாம் நம் இன்வாழ்கையை சுகித்து வாழமுடியாத வண்ணம் செய்வது நம் 
மனம்தான். இறைவன் புரியும் அணைத்து செயல்களிலும் மூக்கை நுழைத்து இது சரி 
தவறு என்று அதிகப்பிரசங்கித்தனம் செய்வது நம் மனம் தான். மனதின் பிடியில் இருந்து
 விடுபடுவதே உண்மையில் விடுதலையாகும்,

மனோ நாசமே முக்தியாகும், 

அவ்வாறு உயிருடன் இருக்கும்போதே நாம் நம் மனதை ஜெயித்து, கற்பனைகளை 
கடந்து, சிந்தையை நினைப்பர வைத்தோமேயானால், அதேவே ஜீவன் முக்தி.

"முக்தி என்பது ஒருவன் வாழ்நாளில் அடையப்பட வேண்டுமே தவிர, செத்தபிறகு
 எங்கோ சென்று அடைவது அல்ல" என்று மகரிஷி வசிஷ்டர் தன் யோக வாசிஷ்டம் 
என்னும் நூலில் தீர்கமாக மொழிகிறார்.

No comments:

Post a Comment