Saturday, 30 January 2016

சாஷ்டாங்க நமஸ்காரம்

கோயிலுக்குள் வலம் வரும்போது, ஒவ்வொரு சந்நிதியிலும் கைகூப்பி மட்டுமே 
வணங்க வேண்டும். கீழே விழுந்து வணங்குவது கூடாது. கொடி மரத்தைத் தாண்டி வந்து 
மூலவருக்கு நேராக மட்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
கிழக்கு, மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்கு நோக்கி தலை வைத்தும், வடக்கு,
 தெற்கு பார்த்த கோயில்களில் கிழக்கு நோக்கி தலை வைத்தும் சாஷ்டாங்க நமஸ்காரம் 
செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யபடும் சாஷ்டாங்க நமஸ்காரத்தால் இருவித பாவங்கள்
 நிவர்த்தியாகிறது. ஒன்று போன பிறவியில் நமஸ்காரம் செய்யாதது, மற்றொன்று
 அடுத்த பிறவியில் நமஸ்காரம் பண்ணாமல் இருக்கப் போவது. முற்பிறவியில் 
சிவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருந்தால், இந்த பிறவி நமக்கு ஏற்பட்டிருக்க
 வாய்ப்பில்லை. எனவே இப்போது சிவனை வணங்கி விட்டால் அடுத்த பிறவி எடுக்கவும்
 வாய்ப்பில்லை

No comments:

Post a Comment