Friday, 26 February 2016

ஓர் பெரியவர்

அன்று ஒரு குடும்பத்துக்கு
ஓர் பெரியவர் இருந்து நல்லது கெட்டது சொல்லி வழி நடத்தினர் குடும்பமும் ஒற்றமையுடன் இருந்ததது
இன்றோ எல்லோருக்குமே
பெரியமனிதர் என்ற நினைப்பில் வாழும் காலமாக அமைந்து விட்டதால் யாருடைய
அறிவுரையும் ஏற்றுகொள்ளாமல்
குடும்ப ஒற்றுமை சிதைகிறது

2 comments:

  1. இதுதான் உண்மை.

    ReplyDelete
  2. *பெரியமனிதர்* என்ற பதத்துக்கு ஒரு சிறுகதை கூறுகிறேன்.

    அநேகருக்கு தங்கள் பார்வையில் அவர்கள் ஏதோ மிகவும் பெரியவர்கள் என்ற நினைவு உள்ளது. இது மிகவும் மதியீனமான காரியமாகும். தங்களை அவர்கள் உயர்வாக எண்ணிக் கொள்கின்றனர். தங்களையும், தங்களுக்
    குரிய காரியங்களையும் பெரிதாக பேசிக்
    கொள்கின்றனர். இதற்கு ஒரு கதை உண்டு.

    ஒரு ஈ ஒரு எருதின் கொம்பிலே நெடுநேரம் உட்கார்ந்திருந்தது. அந்த கொம்பில் இருந்து ஈ பறந்து செல்ல ஆயத்தமானபோது அந்த எருதைப் பார்த்து பேசியதாம், எருதே நான் பறந்து செல்லப்
    போகிறேன் உனக்கு எந்த துக்கமும் இல்லைதானே என்றதாம்.

    எருது ஈ யைப் பார்த்து சிரித்துக் கொண்டே, தனது கண்களை மேலே உயர்த்தி, ஓ! சிறிய அற்பமான ஈயே, நீ இருந்தால் என்ன அல்லது போனால் என்ன இரண்டும் எனக்கு ஒன்றுதான். நீ எனது கொம்பில் வந்து உட்கார்ந்ததே எனக்கு தெரியாதே. அப்படியிருக்க நான் போகட்டுமா என்கிறாயே என்றதாம்.

    மேற்கண்ட ஈயின் கதையைப் போலத்தான்
    அநேகருடைய எண்ணமும் உள்ளது. உலகம் என்ற எருதின் கொம்பில் அமர்ந்திருக்கும் அவர்கள் தங்களை குறித்து வீண்பெருமை கொண்டு தங்களை
    சுற்றியுள்ள உலகம் அவர்களை தங்கள் தலைக்கு மேல் தூக்கி வைத்து திரிகின்றது. தங்களுக்கு பெரிய முக்கி
    யத்துவம் கொடுக்கின்றது என்று மாயையான மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

    இறைவன் நம்மைக் குறித்து சொல்லும் வார்த்தையை கவனியுங்கள். நாம் வெறும் மண் என்கிறார்.

    ஆகவே, பகவானுக்கு முன்பாக, இதோ நான், நீசன், நான் பாவி, நான் தூளும், சாம்பலுமாயிருக்கிற அடியேன் என்று தன்னை பகவான் முன்பாக தாழ்த்தினால், பகவான் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்ப்பார் என்று ஒருபோதும் மறவாதேயுங்கள்.

    தன்னை தாழ்த்துகிறவன் எவனோ அவனே உயர்த்தப்படுவான்.

    என்றும் நல்லாசியுடன் உங்கள் Jansikannan.


    ReplyDelete