ஆன்மிக தகவல்கள்;-
#கோயில் கொடிமரத்தைத் தாண்டித் தான் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டுமா? ஆமாம்.
#கோயிலில் ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக நமஸ்காரம் செய்யக் கூடாது.
#கொடிமரத்திற்கு வெளியில் செய்தால் எல்லா சுவாமிக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்த புண்ணியம் கிட்டும்.
#இரட்டைத்திரி போட்டுத் தான் விளக்கேற்ற வேண்டுமா? அப்படி ஒன்றும் விதி கிடையாது. விளக்கின் அளவிற்கு ஏற்றாற்போல் ஒரே திரியாகப் போட்டு ஏற்றினால் போதுமானது.
#குளித்து விட்டு ஈரத்துணியுடன் வழிபாடு செய்யலாமா? ஈரத்துணியுடன் எந்த நல்ல செயல்களும் செய்யக்கூடாது.
#துவைத்துக் காய்ந்த தூய்மையான ஆடைகளை அணிந்தே வழிபாடு செய்ய வேண்டும்.
#நாம சங்கீர்த்தனம் சிறப்பானது என்று சொல்வது ஏன்? பகவான் நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பதையே நாம சங்கீர்த்தனம் என்பர்.
#கலியுகத்தில் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடின்றி எல்லோருக்கும் கஷ்டங்கள் ஏற்படத்தான் செய்கிறது.
இதிலிருந்து ஓரளவாவது நம்மைக் காப்பாற்றக் கூடியது இதுதான்.
#சந்திராஷ்டமம் இருந்தால் சுபவிஷயம் செய்யலாமா? கூடாதா? சந்திராஷ்டம தினத்தில் மனக்கசப்பு, சண்டை முதலியன ஏற்பட வாய்ப்புண்டு என்பார்கள். எனவே, தான் சுபநிகழ்ச்சிகள் செய்யவேண்டாம் என்று கூறுகிறார்கள்.
#செய்து தான் ஆக வேண்டும் என்ற சூழலில் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபட வேண்டும். அன்று கூடுமானவரை மவுனமாக இருப்பது நல்லது.
அருமையான ஆன்மீகத் தகவல்கள்.
ReplyDelete