Saturday, 20 February 2016

வயிற்றில் ஆண் குழந்தையா? இந்த உணவுகளை ருசிக்க தூண்டும் !

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு சில உணவுகளை சாப்பிட வேண்டும் என தோன்றும்.
இனிப்பு, புளிப்பு, உப்பு என விதவிதமான உணவுகளை சாப்பிடுவார்கள்.
கர்ப்பிணிகள் தாங்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளை வைத்தே, வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பது குறித்து அறிந்து கொள்ள முடியும்.
இதற்கு அறிவியல்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், சில சமயங்களில் இந்த கணிப்பு உண்மையாகிறது.
அப்படி ஆண் குழந்தை இருந்தால் சாப்பிட தோன்றும் உணவுகள் இதோ,
கர்ப்பிணிகளுக்கு இனிப்பான உணவுகளைப் பார்த்து அதிக ஆசை எழுந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்றும், அதுவே உப்புமிக்க உணவுகளின் மீது ஆசை அதிகம் இருந்தால், இது ஆண் குழந்தை என்றும் கருதப்படுகிறது.
காரமான உணவுகளை உட்கொள்ளாமல் இருந்துவந்த பெண்களுக்கு, கர்ப்பகாலத்தில் திடீரென காரமான உணவுகளின் மேல் ஆசை ஏற்படுதல்.
அசைவ உணவுகளின் மேல் நாட்டம் அதிகரித்தல்.
ஆண் குழந்தையை சுமந்துகொண்டிருக்கும் கர்ப்பிணிகளுக்கு ஊறுகாயை பார்த்தால் நாவில் எச்சில் ஊறும், ஏனெனில் உப்பு, காரம், புளிப்பு போன்றவை அதில் அடங்கியுள்ளன.
பொதுவாக, ஆரஞ்சு பழங்களை ஏராளமான கர்ப்பிணிகள் விரும்பி சாப்பிடுவதாக கூறப்படுகிறது.
பெண் கருத்திரிப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பிருந்தே முட்டைக் கேஸ், பீன்ஸ், கேரட், காலிபிளவர், வெங்காயம், உப்பு இவற்றை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்ளும் போது பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் அதிகரித்து ஆண் குழந்தை பிறக்கும்.
இதே சமயத்தில் கால்சியம், மக்னீசியம் உணவில் அதிகரிக்கும் போது பெண் குழந்தை பிறக்கிறது.
இவ்வாறு நமது உடலில் எந்த சத்து அதிகரிக்கிறதோ, அவ்வாறே குழந்தை பிறக்கிறது. என்பதைப் புரிந்து கொண்டு உணவு உட்கொள்ள வேண்டும்.

1 comment:

  1. ஆணா, பெண்ணா எந்த குழந்தை என்பதை குழந்தை சுமக்கும் தாயின் வயிற்றுப் பகுதியைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். தாயின் வயிறு, ஒடுக்கமாக கூர்மையாக இருந்தால் ஆண் குழந்தை. தட்டையாக, பெரிய வயிறாக இருந்தால், பெண்குழந்தை.
    மேலும், கையை தலைக்கு அடியில் வைத்து, வலதுபுறமாக திரும்பிப் படுத்திருந்தால் ஆண்குழந்தை. அதே போன்று இடது பக்கமாக திரும்பிப் படுத்திருந்தால் பெண்குழந்தை என்று மிக தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete