உடல் அரிப்பு என்பது குழந்தைகள் முதல் பெரியவர் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை.இதனால் அடிக்கடி மருத்துவரை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் வீட்டிலிருந்தபடியே இந்த அரிப்பை விரட்ட அற்புதமான மூலிகை தாவரம் கீழாநெல்லி. இது பல நோய்களை தீர்க்ககூடிய வல்லமை படைத்தது. இது ஒரு சிறு தாவர வகையை சேர்ந்தது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். இதை பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர். இந்த செடியின் தண்டு, வேர் மற்றும் இலைகள் என அனைத்தும் பயன்தரக் கூடியவை.
கீழாநெல்லியின் மகத்துவங்கள்
கீழாநெல்லியினால் தயாரித்த தையலம் கை,கால் எரிச்சல், கண்களின் உஷ்ணத்தன்மை, தலைசுற்றல் மயக்கம், பித்தக் கிறுகிறுப்பு, அதிக போகத்தினால் உண்டான அசதி அகியவற்றை நீக்கும் குணமுடையது.குளிர் காய்ச்சலுக்கு கீழாநெல்லி ஒரு பங்கும், மிளகு அரை பங்கும், வெள்ளைப் பூண்டு அரை பங்கும் சேர்த்து நன்றாக கரைத்து மிளகளவு மாத்திரைகளாகச் செய்து காலை மாலை கொடுக்க காய்ச்சல் குணமாகும். ரத்த குறைவினால் ஏற்படும் சோகை வியாதிக்கும் கீழாநெல்லி ஒரு நல்ல மருந்தாக பயன்படுகிறது. கல்லீரல், மண்ணீரல், சிறு நீரகங்களின் வீக்கத்தையும் குறைத்து இரத்தத்தை சுத்தமடைய செய்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று மாந்தம், சீதபேதி முதலிய நோய்களுக்கும் கீழாநெல்லி உதவுகிறது. இதை சுண்டைக்காயளவு பாலோடு அல்லது நீரிலோ கொடுத்தால் எந்த நோய்களும் அண்டாமல் இருக்கும். இதன் இலைகளை தேவயான அளவு அரைத்து உடம்பில் தேய்த்து குளித்தால், உடலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிறு புண்கள் ஒழிந்து விடும். |
No comments:
Post a Comment