Saturday, 20 February 2016

இளநீர்

இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதமான இளநீர் வெப்பத்தை தணித்து, ஜீரண சக்தியை அளிக்கும்.
இளநீர் குடித்தால் இரத்தம் சுத்தமடைவதோடு மட்டுமல்லாமல், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது.
பெண்களின் மாதவிலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது பிற உணவுகளை தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.
சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு (Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.
டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.
அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும்.
இவ்வளவு நன்மைகளை மனிதனுக்கு வழங்கும் இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
ஏனெனில் தூங்கி எழுந்தவுடன் வயிறு சற்று சூடாக இருப்பதால், இளநீரில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்களை உருவாக்கும். ஏதாவது உணவு எடுத்த பின்னரே இளநீரை சாப்பிடவேண்டும்.
இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூட அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.
மேலும், வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம்.
எனவே, உணவு இடைவேளையில்தான் இளநீர் அருந்தவேண்டும். அதுவும் வெட்டிய உடன் இளநீரைக் குடித்துவிட வேண்டும், இல்லையெனில் ஃபுட் பாய்ஸன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.

No comments:

Post a Comment