Saturday, 20 February 2016

பாலுடன் தேன் கலந்து குடித்தால்

பாலுடன் தேன் கலந்து குடித்தால் செரிமானப் பிரச்சனைகள் குணமாவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு பல்வேறு விதமான ஆரோக்கியங்களை வழங்குகிறது.
இதில் உள்ள புரோபயோடிக் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தால் உடலின் ஆற்றல் குறையும், இதனால் பாலுடன் தேன் கலந்து குடித்தால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும்.
எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணி காக்க உதவும், பாலுடன் தேன் கலந்து குடித்ததால், எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
இரவு தூங்கும் போது குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும்.
மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்கள், வெதுவெதுப்பான பாலில் தேனை கலந்து, அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமடையும்.
சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதனை குடித்தால், அதில் உள்ள ஆன்டி பாக்டீரியல், உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சளித்தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
மேலும் இவற்றில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இனப்பெருக்க மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
உடல் உள்ள கொழுப்புகளை கரைத்து எடையை குறைக்க உதவுகிறது. நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் உணவு உட்கொண்ட பின்னர், பாலுடன் தேன் கலந்து குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும்.

1 comment: