Tuesday, 1 March 2016

பித்ரு வழிபாடு

பித்ரு வழிபாடு கேள்வி - பதில்
1. ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடு எது?
பித்ரு வழிபாடு
2. பித்ரு வழிபாடு என்றால் என்ன?
இறந்த நம் முன்னோர்களை வழிபாடு செய்வதே பித்ரு வழிபாடு ஆகும்.
3. பித்ரு வழிபாடு செய்வதன் முக்கியத்துவம் என்ன?
எல்லா வழிபாடுகளுக்கும் முதன்மையானது பித்ரு வழிபாடு ஆகும். பித்ரு வழிபாடு முடிந்த பின்னரே மற்ற வழிபாடுகள் நடைபெற வேண்டும்.
4. பித்ரு வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும்?
நம் நலனில் அக்கறை கொண்ட பித்ருக்கள் பசியில்லாமல் ஒளியுலகில் இன்புற்றிருக்க பித்ரு வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும்.
5. பித்ரு வழிபாட்டை யாரெல்லாம் செய்யலாம்?
இனம், மதம், மொழி, சாதி வேறுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் பித்ரு வழிபாடு செய்யலாம்.
6. பித்ரு வழிபாட்டை தந்தை உயிரோடு இருக்கும் போது செய்யலாமா?
தாராளமாக செய்யலாம். இறந்த முன்னோர்கள் தன் பசியாற நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். உதாரணமாக நம் தாத்தா அவரது மகன் உணவளித்தால் தான் சாப்பிடுவாரா? இல்லையே. அவரது பேரப்பிள்ளைகள் நாம் உணவளித்தாலும் சாப்பிடுவார்.
7. பித்ரு வழிபாட்டை பெண்கள் செய்யலாமா?
தாராளமாக செய்யலாம். அமாவாசை முடிவதற்குள் ராமன் பித்ரு வழிபாடு செய்ய இயலவில்லை. அதற்குள் சீதாதேவி பித்ரு வழிபாட்டை செய்து முடித்தார். ராமன் மீண்டும் பித்ரு வழிபாடு செய்ய தொடங்க தசரதர் அசரீரீயாக தாம் சீதாதேவி கொடுத்த எள் நீரால் பசியாறி விட்டதாக கூறினாராம். இதனை ராமாயணம் உறுதி கூறுகிறது.
8. பித்ரு வழிபாட்டை எங்கே செய்வது சிறப்பு?
கோவில்கள், நதிக்கரைகள், குளக்கரைகள், கடற்கரைகள், புண்ணிய தீர்த்தங்கள், ஜீவ சமாதிகள் ஆகிய இடங்களில் செய்யலாம்.
9. பித்ரு வழிபாட்டை செய்ய சிறப்பான இடம் எது?
இவ்வுலகில் பித்ரு வழிபாடு செய்ய எத்தனையோ இடங்கள் இருப்பினும் திருவண்ணாமலையில் செய்யும் பித்ரு வழிபாடு 1000 மடங்கு பலன் தரக்கூடியது. பித்ரு வழிபாடு செய்ய திருவண்ணாமலையை விட சிறந்த இடம் உலகில் இல்லை. அண்ணாமலையாரே வல்லாள மகாராசருக்கு பித்ரு கடன் தீர்த்த இடமான பள்ளிகொண்டாப்பட்டு (திருவண்ணாமலையிலிருந்து 5 கிமீ தொலைவில்) என்னும் ஊர் மிகவும் சிறப்பானது. அண்ணாமலையாரே பித்ரு கடன் தீர்த்த இடத்தை விட சிறப்பான இடம் உலகில் இருக்க முடியாது. இது அகத்தியர் வாக்கு.
10. பித்ரு வழிபாட்டை எப்போது செய்யலாம்?
மாதப்பிறப்பு, அயன பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண காலங்கள், அமாவாசை திதி ஆகிய காலங்களில் பித்ரு வழிபாட்டை செய்யலாம். கோவில் தலங்களில் செய்யும் பொது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். கோவில் தலங்களுக்கு காலவரையறை இல்லை.
11. பித்ரு வழிபாட்டில் இடம் பெற வேண்டிய பொருட்கள் யாவை?
தர்ப்பை, சுத்தமான நீர், கருப்பு எள் (ஆண்களுக்கு), வெள்ளை எள் (பெண்களுக்கு), ருத்திராட்சம், சங்கு ஆகியன.
12. பித்ரு வழிபாட்டில் எந்த மந்திரங்களை பயன்படுத்த வேண்டும்?
வடமொழி அல்லது தமிழ் மந்திரங்களை பயன்படுத்தலாம். தமிழ் மந்திரங்கள் மிகவும் சிறப்பானவை. ஏனெனில் தமிழே மந்திரமொழி ஆகும்.
13. பித்ரு வழிபாடு முடிந்தவுடன் செய்ய வேண்டிய முக்கிய செயல் என்ன?
அன்னதானம் செய்ய வேண்டும்.
14. பித்ரு வழிபாட்டின் பயன்கள் யாவை?
திருமணம், வேலை கிடைத்தல், குழந்தை பாக்கியம், செல்வ செழிப்பு, குடும்ப முன்னேற்றம் இன்னும் பல.
15. பித்ரு வழிபாடு செய்யாவிடில் ஏற்படும் துன்பங்கள் யாவை?
பித்ரு தோஷம் மற்றும் பித்ரு சாபம் உண்டாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!
ஓம் றீங் அண்ணாமலையே போற்றி…!!!

No comments:

Post a Comment