Tuesday 1 March 2016

விநாயகர் என்பதன் பொருள்

விநாயகர் என்பதன் பொருள்
------------------------------------------------
"வி' என்றால் "இதற்கு மேல் இல்லை' எனப் பொருள். "நாயகர்' என்றால் "தலைவர்' எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட கணபதிக்கு "விநாயகர்' என பெயர் சூட்டப்பட்டது.
விநாயகருக்கு அர்ச்சிக்கும் போது "ஓம் அநீஸ்வராய நம' என்பர். "அநீஸ்வராய' என்றால் "இவருக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லை' எனப் பொருள். ஆதிசங்கரர் கணேச பஞ்சரத்தினம் என்ற நூலை இயற்றினார். அதில் விநாயகரை "அநாயக ஏக நாயகம்' எனச் சொல்கிறார்.
இதற்கு "தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாமல் ஒரே மூலப்பொருளாக இருப்பவர்' எனப் பொருள். பூத கணங்களுக்கு தலைவர் என்பதால் "கணபதி' என்றும், பாவவினைகளைத் தீர்ப்பவர் என்பதால் "விக்னேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

1 comment:

  1. விநாயகர் பற்றி, ஒரு அருமையான தகவல் கொடுத்ததற்கு நன்றி.

    விநாயகர் என்றதும், விநாயகர் கவசம் ஒன்று ஞாபகத்தில் உள்ளது. தினமும்
    எப்போ வேணாலும், மனதுக்குள்ளோ, ஹம்மிங்காகவோ(Humming)சொல்லலாம்

    ஏகதந்தர் பகல்முழுதும் காக்க இர
    வினும் சந்தி இரண்டன் மாட்டும் ஓகையின்விக் கினகிருது காக்க இராக்
    கதர்பூதம் உறுவே தாளம்
    மோகினிபேய் இவையாதி உயிர்த் திறத்தால்− வரும்துயரும் முடிவு இலாத
    வேகம்உறு பிணிபலவும் விலக்குடிபா
    சாங்குசர்தாம் விரைந்து காக்க.. என்று
    பாடினால் எல்லா தொல்லைகளும் உங்களைவிட்டு அகன்றுபோம் என்பதே!

    ReplyDelete