Sunday, 13 March 2016

ல்லோரிடத்திலும் அன்பு காட்டுங்கள். அன்பை மிஞ்சிய சக்தி எங்குமில்லை.

இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவர் பிரமச்சாரி இன்னொருவர் திருமணமானவர்.
அவர்கள் இருவரும் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்து தானியங்களை சமமாக பங்கிட்டு கொள்வார்கள். திருமணமான சகோதரன் தூக்கத்திலிருந்து அடிக்கடி எழுந்து யோசிப்பான். இது அழகல்ல! என்னுடைய சகோதரன் பிரமச்சாரி. விளைச்சலில் பாதிப்பங்கு அவனுக்குச் செல்கிறது. இங்கு நான், என் மனைவியோடும் ஐந்து குழந்தைகளுடனும், என் முதுமைக்காலத்திற்கு தேவையான சகல பாதுகாப்புடன் இருக்கிறேன். ஆனால், என் சகோதரன் வயோதிகப்பருவத்தில் கவனிக்க யார் இருக்கிறார்கள்.
எதிர்காலத்திற்கான சேமிப்பு, என்னை விட அவனுக்குதான் அதிகமாக இருக்க வேண்டும். என்னை விட அதிகமான பங்கினை தருவதுதான் முறை"
இந்த சிந்தனையில் படுக்கையை விட்டு எழுந்த அவன், தன்னுடைய தானிய களஞ்சியத்தில் இருந்து மூட்டை நிறைய தானியங்களை எடுத்து போயி தன் சகோதரன் களஞ்சியத்தில் ரகசியமாக வைத்தி விட்டான்.
இதே போன்று எண்ணம், பிரமச்சாரி சகோதரனுக்கும் அடிக்கடி ஏற்பட்டது. அவனும் துக்கத்தில் இருந்து எழுந்து இப்படி சொல்வான். "இது கொஞ்சம் கூட நன்றாக இல்லை. மனைவியோடும் ஐந்து குழந்தையோடும் வாழும் என் சகோதரனுக்கும் விளைச்சலில் பாதி போகிறது.
நான் தனி கட்டை. எனக்கென்றும் யாரும் இல்லை. அதனால் குடும்பஸ்தனான என் சகோதரன், என்னை விட அதிகமாக தானியங்கள் பெறுவதுதான் நியாயம்." இப்படி நினைத்த அவன் படுக்கையை விட்டு எழுந்து தன் களஞ்சியத்திலிருந்து மூட்டை நிறைய தானியங்களை எடுத்து போயி, சகோதரனின் களஞ்சியத்தில் வைத்து விட்டான்.
இதே போல், ஒவ்வொரு விளைச்சல் முடிந்தபின்பும், இருவரும் பங்கிட்டுக்கொண்ட பிறகு தானியங்களை சகோதர்கள் இருவரும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர், மாற்றிவைத்து கொண்டு இருந்தனர். ஒரு சமயம் இருவரும் எதிர் எதிராக சந்தித்து கொண்ட பொழுது இருவர் கண்களும் கலங்கி போயிருந்தனர்.
அந்த அன்பு என்ற கண்ணீர் துளியில், சகோதரர்கள் சந்தித்த இடத்தில்தான் பிற்காலத்தில் அந்த கிராமமே கோவில் கட்டியது. ஓஷோ சொல்கிறார் "அன்பு ஏதேனும் ஒரு வழியில் வழிந்து கொண்டே இருக்கும்".
சகோதரர்கள் என்றல்ல....எல்லோரிடத்திலும் அன்பு காட்டுங்கள். அன்பை மிஞ்சிய சக்தி எங்குமில்லை.

No comments:

Post a Comment