Friday, 11 March 2016

பக்க வாதம்

பக்க வாதம் என்பது மனிதனை சமச்சீராக இரண்டு பாதியாக பிரிக்கும் போது பெறப்படும் ஒருபக்க உடலானது முழுமையாக பாதிப்படைவதைக் குறிக்கும். இதன் போது கைஇ கால் மற்றும் முண்டம் என்பன செயலிழந்து விடுவதனால் பாதிக்கப்பட்ட மனிதன் ஏறத்தாழ முழுமையாக ஊனமடைந்து விடுகின்றான்.
பக்க வாதம் ஏற்பட்ட மனிதனில் பின்வரும் அறிகுறிகளை எம்மால் இனங்கண்டு கொள்ள முடியும்.
இயல்பான நடக்கும் முறை பாதிப்படைந்து ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் பாதிப்படைந்த காலை முன்னோக்கி தூக்கி வைக்க முடியாமல் தரையுடன் இழுபட்ட நிலையில் ஒரு பக்கமாக சுற்றிய நிலையில் காலை முன்னோக்கி வைத்தல்.
நடக்கும் போதும் நிற்கும் போதும் நிலையான உடலமைப்பை பேண முடியாமல் அஙகும் இங்குமாக தடுமாறுதல.;
சாதாரணமாக கைகளால் செய்யக்கூடிய வேலைகளை செய்ய முடியாதிருத்தல் உதாரணமாக ஒரு பொருளை பற்றுதல்இ தூக்குதல்இ எழுதுதல்.
தசைகள் இறுக்கமடைந்து அசைக்க முடியாத நிலையில் காணப்படுதல்
கோபம், எரிச்சல், கிரகிக்க முடியாமை, பயம் போன்ற உணர்வுகளால் பாதிக்கப்படுதல்
தாழ்வு மனப்பான்மை பற்றிக் கொள்ளல்.
தோள் மூட்டானது பகுதியான விலகுதல்.
தோள் மூட்டினை அசைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுதல்.
கட்டுப்பாடின்றி அவயவங்கள் அசைய முற்படுதல்
காலையில் சுக நலத்துடன் இருந்த மனிதர் மாலையில் திடீரென படுத்த படுக்கைக்கு மாறிவிட்டதாக எம்மில் பலர் கேள்வியுற்றிருக்கலாம். கிணற்றடிக்கு அல்லது குளியலறைக்கு சென்றவர் அங்யேயே விழுந்து பேச முடியாத, கை கால்கள் மற்றும் வாய் என்பன ஒரு பக்கத்தை நோக்கி திருப்பப்பட்டு பக்க வாதத்தால் பீடிக்கப்பட்டு விட்டதாக அறிந்திருப்போம்.
இவ்வாறு பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அந்நிலையிருந்து மீள முடியாமல் வாழ்நாள் முழுக்க சக்கர நாற்காலியுடன் அல்லது படுக்கையுடன் காலம் கழித்து மரணித்த சில சங்கதிகள் எங்கள் ஊரில் அல்லது எமது குடும்பத்திலும் நடைபெற்றிருக்கலாம்.
பக்க வாதமானது திடீரென ஒருவரில் ஏற்பட்டாலும் இந்நிலை உருவாக காரணமான காரணிகள் (வயது, உயர் குருதி அமுக்கம், நீரிழிவு? உயர் கொலஸ்ரோல், புகைத்தல்) எம்மை தொற்றிக் கொள்ள நீண்ட காலம் எடுக்கின்றன.
எனவே நாம் மிகுந்த அவதானத்துடன் எமது பழக்க வழக்கங்களை அமைத்துக் கொள்ளும் போது இவ்வாறான ஆட்கொள்ளி பக்க வாத நோயிலிருந்து எம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம்.
எமது மூளையில் சடுதியாக ஏற்படும் அசாதாரண நிலையினாலேயே இப்பக்க வாதம் பிரதானமாக ஏற்படுகின்றது. எமது மூளைக்கலங்கள் ஒட்சிசன் மற்றும் குளுக்கோசு என்பவற்றை தொடர்ச்சியாக உள்ளளெடுத்தே தமது பணிகளை முன்னெடுக்கும் வகையில் இறைவனால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு பதார்த்தங்களும் இரத்தம் மூலமே மனித மூளைக்கு வினியோகிக்கப்படுகிறது.
எனினும் இவ்வாறான தொடர்ச்சியான இரத்த வினியோகமானது பிரதானமாக இரண்டு காரணங்களினால் தடைப்படுகிறது. அதாவது மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைவடைதல் (Ichaemia). அதாவது குருதிக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகள் காரணமாக தொடர்ச்சியான இரத்தப் பாய்ச்சலில் குறைவு ஏற்படுகிறது.
அதே போன்று இரத்தக் குழாய்களில் ஏற்படும் காயம் காரணமாக இரத்தமானது மூளையினுள் கசிய ஆரம்பித்து விடுகிறது (Haemorrhage). இதனாலும் மூளைக்குக் கிடைக்க வேண்டிய இரத்தத்தின் அளவு குறைவடைந்து மூளைக்குத் தேவையான ஒட்சிசன் மற்றும் குளுக்கோசின் அளவில் பற்றாக்குறை உண்டாகி அதன் தொழிற்பாடுகள் மற்றும் அதனால் உடலில் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள் என்பன இழக்கப்பட்டு பல்வேறு அசாதாரண நிலைகள் (அசைய முடியாத நிலை, எதையும் விளங்கிக் கொள்ள முடியாத நிலை, பேச முடியாமை, பார்வை பாதிக்கப்படல்) உடலில் சடுதியாக ஏற்பட்டு விடுகின்றது. இதையே மருத்துவத்தில் Stroke என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு உண்டாகும் ஆபத்தான மற்றும் சிக்லான ஒரு நிலைமைகளின் ஒரு கட்டமே பக்க வாதமாகும்.
பக்க வாதம் ஏற்பட்ட நோயாளிகள் தமக்கான சிகிச்சைகளை காலம் தாழ்த்தாது மேற்கொள்ள ஆரம்பிப்பதன் மூலம் தமது இயல்பு வாழ்க்கைக்கு மிக விரைவாக திரும்ப முடியும். எனினும் இந்நோயாளிகளில் பெரும்பாலானோர் ஒரு வருட காலத்தின் பின்னர்; வைத்தியசாலைகளை நாடுகின்றனர். பக்க வாதம் ஏற்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் அவர்களின் உடல் மிக மோசமான நிலையை அடைந்து விடுவதால் அவர்களை குணப்படுத்துவதற்கு மிக நீண்ட காலம் எடுப்பதுடன் இயல்பு வாழ்கை முறைக்கு மீள அழைத்துச் செல்வதும் கடினமான செயன்முறையாக மருத்துவத்தில் மாறிவிடுகிறது.
பக்க வாதத்திற்கான மூலிகை மருத்துவ சிகிச்சையை பெற்றுக் கொள்வதன் மூலம் இந்நிலைமையிலிருந்து குணமடைய முடியும்.

1 comment: