Wednesday, 16 March 2016

தெய்வம் ஒன்றும் அல்ல பலவும் அல்ல

தெய்வம் ஒன்றும் அல்ல பலவும் அல்ல
----------------------------------------
இன்றைய காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய பிரச்சினை கடவுள் உள்ளனா? இல்லையா? என்பதைவிட கடவுள் ஒன்றா? பலவா? எனதுதான்.
பல என்பவன் ஒன்று என்பவனை சாடுவதும், 
ஒன்று என்பவன் பல என்பவனை மிதிப்பதும் கவலைக்கேடான ஒன்றாக்கிவிட்டது.
தெளிவுடன் கூர்ந்து சிந்தித்தால் தெய்வம் ஒன்றும் அல்ல பலவும் அல்ல. பிறகு அதை எப்படி கூறுவது?
தெய்வம் உள்ளது. அவ்வளவே கூறமுடியும். அதற்கு மேல் கூறுவதற்கு ஒன்றுமே அதைப்பற்றி இல்லை.
அதைப்பற்றி கூறுமளவிற்கு அதை அறிந்தவன் பிறக்கவுமில்லை, பிரக்கபோவதுமில்லை.
முதலில் தெய்வம் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள கொள்ளவேண்டும். தெய்வம் என்பது கண் முதலிய புலன்களால் அறியப்படுவது அன்று. தூய அறிவில் உணரப்படுவது.
தெய்வம் என்பது ஒரு உணர்வு.
இறைவன் என்பது வெறும் இருப்பு மாத்திரமே.
தெய்வம் என்பது ஒரு நிலையான தன்மை.
தெய்வம் என்பது ஒரு தனிப்பொருள் அல்ல.
அது ஒரு தத்துவம். நாம் தெளியவேண்டிய தத்துவம்.
காணக்கூடிய மாயை அன்று. என்றும் உள்ள சத்தியம்.
நீரையும், நெருப்பையும், ஆகாயத்தையும், மண்ணையும்........ எவ்வாறு ஒன்று பல என்று கூறமுடியும்?
அவ்வாறே தெய்வமும்.
இறைவன், தெய்வம், ப்ரஹ்மம்........ என்பது ஒரு தனிப்பொருள் அல்ல. அது ஒரு ஒருங்கிணைப்பிற்கு வைக்கப்படும் பெயர். அவ்வளவே.
மனித உடல் என்பது ஒரு தனிப்பொருள் அல்ல. பல எண்ணிலடங்கா உயிரணுக்களின் ஒருங்கிணைப்பே மனித உடல் எனப்படுவது.
அவ்வாறே, நிஜத்தில் உள்ள சூரிய சந்திர, நக்ஷத்திரங்கள், அனந்த கோள்கள், விண்மீன்கள், இந்த உலகைப்போன்றே எண்ணற்ற உலகங்கள், நாய், நரி, மீன், மலை, மடு, மரம், மட்டை, நீ, நான்............. முதளியவையின் ஒருங்கிணைப்பே கடவுள் என்னும் கற்பனைப்பெயரால் அழைக்கபடுகிறது. உண்மையில் கடவுள் எனப்படும் அந்த இருப்பிற்கு பெயரோ, வடிவமோ, குணமோ, எண்ணிக்கையோ, எதுவும்.... எதுவுமே இல்லை. அது இருக்கிறது. அவ்வளவே.
அது இருப்பு மாத்திரம். அவ்வளவே.
"பிரம்மத்தைப் பற்றி விவரிப்பவன் முட்டாள்" - 

No comments:

Post a Comment