Wednesday, 16 March 2016

பூளைப்பூ

படித்துக்கொண்டிருக்கும் பொழுது இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று நான் தங்கியிருந்த வீட்டின் மாடிப்படியில் உட்கார்ந்திருந்தேன். பக்கத்து வீட்டுப்பாட்டி சலம் கழிக்க வந்தார். ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று விவரம் கேட்டார். என் வேதனையைக் குறிப்பிட்டேன். உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார். "இந்தா இதக்குடி . அரை மணி நேரத்துல சரியாகிடும்" என்று கொடுத்தார். கால் மணி நேரத்திலேயே வலி குறைந்தது. காலையில் ஸ்கேன் செய்து பார்த்தேன் 8mm கல் இருந்தது. மருத்துவர் ஆபரேசன் பன்ன வேண்டுமென்று தற்போதைக்கு மாத்திரை சாப்பிடுமாறு கூறினார். நான் மாத்திரை வாங்கவே இல்லை. பூளைப்பூ வைத்தியத்தைத் தொடர்ந்தால் என்ன என்று மனதிற்குத் தோன்றியது. தினமும் குடிக்குமளவு தண்ணீரை எடுத்து அதில் கைப்பிடிப் பூளைப்பூவைப் போட்டு காய்ச்சிப் 6 அல்லது 7 நாள் குடித்திருப்பேன். வலி சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. மறுபடியும் ஸ்கேன் செய்து பார்த்தேன் 3mm மட்டும் இருந்தது. மறுபடியும் 5 நாட்கள் தொடர்ந்தேன். சிறுநீரகக் கல் இல்லாமல் போனது. பாட்டியின் வழி காட்டுதலால் ஆபரேசனில் இருந்து தப்பித்தேன். அதிலிருந்து வாரம் ஒருமுறை பூளைப்பூவில் கருப்பட்டி போட்டு டீ போல வைத்துக் குடித்துக் கொள்வேன்.
பிறகு தான் தோன்றியது. காப்புக் கட்டுவதென்பது தற்காப்பிற்காகத்தான் என்று...

2 comments:

  1. இதற்கு பெயர் பாட்டி வைத்தியம். தமிழ் மருந்துக்கு ஈடு இணை ஏதய்யா.
    இருந்தாலும், வருமுன் காப்போன், வந்தபின் காப்போன், வருங்கால் காப்போன் மாதிரி, நம் உணவில் 2 வாரத்துக்கு ஒருமுறை, வாழைப் பூ, அல்லது வாழைத்தண்டு உணவில் சேர்த்து வந்தால் , இந்தக் கல் அடைப்பு
    கள் வராது. சிறுநீர் அடக்கி வைத்தல்
    கூடாது. அதிகாலையில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆண்களுக்கு சாப்பாட்டில் கல் இருக்கக்கூடாது. குழந்தையாக இருந்தால், தாயின் கவனக்குறைவே காரணம். பெரியவர்களாக இருந்தால், மனைவியின் கவனக்குறைவே அதற்கு காரணம். நாம் அன்றாட உணவில், என்னென்ன சமைக்கலாம், நம் பிள்ளைகளுக்கோ,கணவருக்கோ எது தேவை என்று அறிந்து செயல்பட்டால், ஆஸ்பத்திரி செலவை குறைக்கலாம், ஆரோக்கியத்துடனும் இருக்கலாம்.

    ReplyDelete
  2. குடும்பம் ஒரு கதம்பம். ஏனோ தானோ என்று சாப்பிடாமல், சிறிதளவு சமைத்தாலும், அன்றாடம் நம் உடம்புக்கு என்ன தேவை என்று, கலை நயத்தோடு சமைத்து சாப்பிடப் பழகுங்கள். நமது ஆத்திச்சூடியையும் மறக்காதீர்கள்.

    ReplyDelete