Sunday, 13 March 2016

உங்கள் வீட்டுத்தோட்டத்தில் அவசியம் வளர்க்க வேண்டிய செடிகள்!

உங்கள் வீட்டுத்தோட்டத்தில் அவசியம் வளர்க்க வேண்டிய செடிகள்!

பத்தாண்டுகளுக்கு முன்பு வரைகூட நம் வீட்டில் தோட்டம் என்று பெரிய இடத்தில் விதவிதமான செடிகள் இல்லாவிட்டாலும் அவசியம் இருக்க வேண்டிய நாலைந்து செடிகள் வைத்திருப்போம். இன்றிருக்கும் ஓட்டமான வாழ்க்கை முறையில் அதற்கெல்லாம் நேரம் ஏது என்று எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டோம். வெறுமனே தோட்டம், செடிகள் என்று மட்டும் நின்று விடாது அதில் நம்முடைய பாரம்பாிய மருத்துவ குணங்கள் நிறைந்த கைமருத்துவத்துக்கு உதவும் மூலிகை செடிகளும் அடக்கம். இன்று நோய்களின் கூடாரமாகிவிட்ட பிறகு, மீண்டும் மூலிகைகள், இயற்கை மருத்துவம், நாமே நமக்குத் தேவையான உணவு பொருட்களை உற்பத்தி செய்துகொள்வது பற்றி சிந்தித்தும் சில பேர் செயல்பட்டும் வருகிறார்கள். இந்த செயல்பாடு பெருக வேண்டும். குறைந்தது 10 செடிகளாவது நம் வீடுகளில் வளர்க்க வேண்டும். அதற்கொரு முன்னோட்டமாக உங்கள் வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க வேண்டிய முக்கியமான சில செடிகள் பற்றி பார்ப்போம்…
வேம்பு
வேம்பு ஒரு கிருமி நாசினி என்பதை எல்லோரும் அறிவோம். வேம்பின் வேரிலிருந்து கொழுந்துவரை எல்லாமே மருத்துவ குணம் மிக்கவை. நிறைய இடம் பிடிக்காத மரம். அடுக்கு மாடி குடியிருப்புகளில்கூட பொ¢ய தொட்டிகளில் நட்டு வளர்க்கலாம்.
DSCN0316
புதினா
புதினா ஜீரண சக்தியை அதிகா¢க்கக்கூடியது. சருமத்தில் பொலிவைத் தரக்கூடியது. உடலிலிருக்கும் நச்சுக்களை நீக்கும் தன்மை உடையது. சுவாச புத்துணர்ச்சி தரும் புதினாவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
DSCN0004
துளசி
இதோ மழை காலம் தொடங்கிவிட்டது. சளி, இருமல், காய்ச்சல் என பாடாய்படுத்தும் தொல்லைகளிலிருந்து விடுபட துளசி டீ அருந்துங்கள். குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால் மாத்திரைகளின் பின்னால் ஓடாமல் இருக்க நீரில் அலசிய இரண்டு துளசிச் செடிகளை திண்ணக்கொடுங்கள்.
DSCN0294கற்பூரவல்லி
முன்பெல்லாம் அஜீரணத்தால் வயிற்றுவலி வந்தால் புழக்கடையில் இருக்கும் கற்பூரவல்லி செடியிலிருந்து இரண்டு இலைகளைப் பறித்து மென்று விழுங்கச் சொல்வார்கள் வீட்டிலிருக்கும் பாட்டிகள். அதேபோல 6 மாதத்திற்கு மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு வறட்டு இருமல் வந்தால் கற்பூரவல்லி இலையின் சாறெடுத்து 4 சொட்டு கொடுத்தால் சாியாகிவிடும் என்பார்கள். இப்போது இதன் மருத்துவ குணம் அறிந்து பஜ்ஜி போன்ற நொறுக்குத் தீனி வடிவிலும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.
கற்பூரவல்லி
கற்பூரவல்லி

1 comment:

  1. வறட்டு இருமலுக்கு, பாலில் பனங்கற்கண்டு சேர்த்து அருந்த கொடுக்கலாம். இருமலுக்கு மற்றுமொரு காரணம் உண்டு. திறந்த வெளி நீரில், பல்துலக்கி வாய் கழுவினால், கொசுக்கள் முட்டையி்ட்டிருக்கும். அந்த நீர் நமக்கு இருமலை உருவாக்கும்.
    மழை நேரங்களில், நீரை நன்கு கொதிக்க வைத்து, ஆறிய நீரைக் குடிக்க வேண்டும். இல்லையேல், செம்புக்குடத்தில் நீர்பிடித்து குடிக்கலாம். ஆனால் தினமும் நீரை மாற்றவேண்டும்

    மேலும், காலையில், துளசியை நன்கு அலசி, சுண்டக்காச்சி, பாலுடன், சீனி சேர்த்து, காப்பிக்குப் பதிலாக அருந்தலாம். இரவு, படுக்கும்போது, குளிர்ந்த காற்று,(உல்லன், கம்பளிக்குப் பதிலாக) காட்டன் பெட்ஷீட்டை, கால்விரல்கள் உச்சந்தலை, காது, இவற்றை மட்டும் மூடி உறங்கலாம். சளி பிடிக்காமல் இருக்க இவ்வாறு செய்யலாம். சுக்கு, முழுமல்லி(கொத்தமல்லி) இவற்றைத் தட்டிப்போட்டு, சீனிக்குப் பதிலாக கருப்புக்கட்டியை போட்டு காப்பி அருந்தலாம். கூடுமானவரை, ஒருவருக்கு ஜலதோஷம், பிடித்திருந்
    தால், அவர்கள் சுவாசக்காற்றை, நாம் சுவாசிக்காமல், (அதாவது முகத்துக்கு நேராக நிற்காமல்) இருக்க வேண்டும். காரணம், ஜலதோஷம் தொற்று நோய் கிருமிகளை பரப்பக்கூடியது. மழை நேரங்களில், இவ்வாறு நாம் கவனமாக இருக்க வேண்டும்.

    ReplyDelete