Sunday, 13 March 2016

அமாவாசை - அதன் சிறப்பு

அமாவாசை - அதன் சிறப்பு
அமாவாசை என்பது அம் + ஆசை = அழகிய ஆசை -->வாழ்வைப் பயனுள்ளதாக, வடிவமைப்புள்ளதாக, வாய்மை உள்ளதாக மாற்றிக் கொள்ளப் பயன்படும் நாள் இது.
மாதத்திற்கு ஒருநாள் தான் வரும் என்பது உலக வழக்கு. ஆனால், சித்தர் நெறிப்படி மூன்றாம் பிறை நாள், இரண்டாம் பிறை நாள், அமாவாசை நாள், அமாவாசைக்கு முந்திய நாள், அமாவாசைக்கு முந்திய நாளுக்கு முந்திய நாள் என்று ஐந்து நாட்களும் அமாவாசை நாட்களாகவே கருதப் படுகின்றன.
அதாவது, மனிதன் அல்லது மனித வாழ்வு அல்லது மனித இயக்கம் என்பது மனித ஆவி + ஆன்மா + ஆருயிர் என்ற மூன்று வகைப்பட்ட தனித்த, வடிவமைப்பும், வாழ்வியலும் உடைய மூன்று வகைச் சத்திகளின் கூட்டு இயக்கமேயாகும். இந்தக் கூட்டு இயக்கம் மேற்படி, அமாவாசை நாட்களான ஐந்து நாட்களில்தான் சிறப்பாகச் செயல்படும். அதிலும் நிறைந்த அமாவாசைப் பஞ்சாங்கப் படி அந்த (24) இருபத்திநான்கு மணி நேரத்தில்தான் இந்த மூன்றின் கூட்டும் நன்றாக சிறப்பாக முழுமையாக ஒன்று சேர்ந்தும் இணைந்தும் பிணைந்தும் நிகழும்! நிகழும்! நிகழும்!
எனவேதான் அமாவாசை உள்ள நேரத்தில் கட்டாயமாக விரதம் இருக்க வேண்டும் என்ற நியதி (அ) சட்டம் அல்லது விதி உண்டாக்கப்பட்டது.

No comments:

Post a Comment