Saturday, 19 March 2016

வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போக கூடாது.

ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.
போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.
சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது.
"என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே" என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார்.
முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார்.
வண்டியை கிளப்ப முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. "இருட்டி போய் விட்டது, இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார்.
போகும் வழியில் "பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிகிட்டு போனார் முதலாளி.
தச்சர் வீடு வந்ததும் "தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா" என்று முதலாளி சொன்னார். "வீட்டுக்குள் வாங்க முதலாளி" என்று அவரை உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார்.
தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.
தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார்.
தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார்.
காலையில்
நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார்.
தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார்.
வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், "இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது" என்றார்.
"அதுவா முதலாளி இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன்.
வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போக கூடாது.
காலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்?
நான் அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில் நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு போவேன்.
ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்". தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார்.
நண்பர்களே! நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள். பிரச்சனைகள் அஞ்சி ஓடும்.

2 comments:

  1. Humbug. வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு மரம், வீட்டிற்குள்ளும் அனைத்து கடமைகளையும் செய்து, வெளியில் அலுவலகத்துக்கும் செல்லும் பெண்களுக்கு போதி மரமா?

    யார் ஒருவர் எந்த வேலையாக இருக்கட்டும், இறைவனை ஒரு நிமிடம் வணங்கி பின் அந்த வேலையை ஆரம்பிக்கவோ, முடிக்கவோ செய்யுங்கள். வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போதே, நம் உடம்பில் சட்டையைக் கழற்றுவது போல், நம்முடைய அசதி, மனச் சஞ்சலம், அனைத்தையும் மறக்க,
    பகவானுக்கு நன்றி சொல்லி முடித்து, நம் கவலைகளை, செருப்பைக் கழற்றுவது போல், வெளியே கழற்றிவிட்டு, வீட்டிற்குள் நுழையுங்கள்.
    பெண் என்பவள், ஆணைவிட மிக அசதியாக வருவாள். ஆனால், வீடு வந்தால், தண்ணீரிலிருந்து, காப்பி வரையும், அவள் தான் கொண்டு கொடுக்க வேண்டும். இப்போ தான் இருவருமே வேலைக்குச் செல்கிறார்
    களே. ஆகவே, இருவருக்குமே டென்ஷன் இருக்குமே. ஆக, அலுவலகத்தை விட்டு, வெளியே வரும்போதே, வீட்டு ஞாபகம் வந்து விட வேண்டும். அதுசரி இல்ல, இதுசரியில்ல, அத இப்படி பண்ணு, இத இப்படி பண்ணு, அதைச் செய், இதைச் செய், என்று ஆண் என்பவன், நச்சரிப்பு கொடுக்காமல், முடிந்தால் மனைவிக்கு வலதுகரமா இருக்கணும், இல்லையேல், அவள் தருவதை, சாப்பிட்டு பாராட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். மரத்துக்குப் பதிலா, அவரவர் மனச்சாட்சிபடி நடந்தாலே போதும். காலையில எழும்பினவுடன், பல்தேய்ச்சோ, தேய்க்காமலோ பெட்காப்பி வேணும். டி.வி ஆன் பண்ணி, படுத்துக்கொண்டே பார்க்கணும், இப்படி இருந்தால், சுத்தியல் என்ன உளியே படும்.தினமும் அலுவலகம் செல்பவர்கள்,அதிகாலை
    யில் இருவரும் எழும்பி, குளித்து, ஒருநிமிடம், பகவானே இன்றைய பொழுதை ஆசீர்வதியும், என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, டென்ஷன் இல்லாமல், அதே நேரம் சுறுசுறுப்பாக
    வும் செய்து, அலுவலகத்திலும், உட்காரப் போகுமுன்னும், அந்த இறைவனை முன்நிறுத்தி அல்லது சுத்தியலை தூக்கும் முன்னும் அன்றைய வேலை முடிந்த பின்னும், இறைவனை நினைத்து துவங்கு, இறைவனை நினைத்து முடித்தால், எந்த மரத்தையும் தொட்டுக்கிட்டு வரவேண்டாம். அலுவலகம் முடிந்தோ, அல்லது தச்சர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததுமே, அனாவசியக் கால்களை தவிர்த்தாலே, அந்த வீட்டில்
    No Problem. குடும்பத்தின் மீது, உண்மையான அன்பு, பாசம், உயர்வான எண்ணம் உள்ளவர்களுக்கு எந்த மரமும் வேண்டாம். நாம் இன்று அலுவலகம் செல்வது உறுதி. அப்படியிருக்க, நல்ல துணிகளை, கண்ணாடியை பார்த்து பார்த்து, அலங்கரிக்கிறோம், வாசனைத் திரவியங்களை உடம்பில் பூசிக்கொள்
    கிறோம். ஆனால் நம்மை சுமந்து செல்கிற வாகனத்தை, ஒரு நிமிடம் துடைத்து, சுத்தம்செய்து எடுத்துச் சென்று பாருங்கள். அத்தனை லெட்சுமியும் உங்கள் வீட்டில் வாசம் செய்வாள். அங்கே சண்டையே வராது. அப்புறம் எதுக்கு மரத்தை தொடணும்.

    மரத்தை வளர்த்தால், மழையும், நிழலும் கிடைக்கும் என்று அறிவுறுத்
    துங்கள்.

    ReplyDelete
  2. அந்த காலத்தைப்போல், ஆண் உழைத்து, பெண் கையில் கொடுக்க, பெண் குடும்பப் பொறுப்பை கையிலெடுத்து, கணவன், உழைத்து, களைத்து, வீடு வரும்போது, என்னங்க, இந்தாங்க தண்ணீர், என்று மலர்ந்த முகத்துடனும், தாங்கள் சொல்வது போல், அழகாக நடுவகிட்டில் பொட்டிட்டு, நைட்டியில் இல்லாமல், சேலை அணிந்து, கணவர் முன் தண்ணீர் செம்பை நீட்டினால், கணவன் களைப்பு, ஒரே நொடியில் ஓடிப் போய்விடும். நல்ல வெயிலில் நடந்து ஒருவன் களைத்து இளைப்பாற ஆலமர நிழலில் நின்றால், எவ்வளவு சுகமாக இருக்குமோ, அந்த சுகம், தன் வீட்டிற்குள் நுழையும்போது, அந்த வீட்டின் மனையாட்டி இருந்தால், அது தாங்க குடும்பம். வந்த உனே, ஏன் லேட், நான் கேட்ட பொருள் வாங்கி வந்தீங்களா, என்று ஒரு அழுக்கு நைட்டியை அணிந்து கொண்டு, தலையை சீவாமல் கொண்டைய போட்டுக்கொண்டு, பால் இல்ல, புளி இல்ல, வத்தல் இல்லன்னா, அந்த வீடுதான் நரகம். ஆக ஒரு பெண் நடந்து கொள்ளும் விதத்தில் தான், அந்த குடும்ப லட்சணம் அடங்கியிருக்கு என்பது தான் உண்மை.

    ReplyDelete