Thursday, 28 April 2016

வேதங்கள் யாராலும் இயற்றப்படவில்லை. வியாச பகவான் ஒன்றாக இருந்த வேதங்களை தனித்தனியே தொகுத்து நான்கு வேதங்களாக நமக்களித்தார்

வேதங்கள் யாராலும் இயற்றப்படவில்லை. வியாச பகவான் ஒன்றாக இருந்த வேதங்களை தனித்தனியே தொகுத்து நான்கு வேதங்களாக நமக்களித்தார். வியாசர் வேதத்தை இயற்றினார் என்பது தவறு. வியாசர் வேதங்களை தொகுத்தார். பல ரிஷிகள் தங்கள் தவ வலிமையினால் வேதமந்த்ரங்களுக்கு மெய்ப்பொருளை கண்டறிந்தனர். அவர்கள் அறிந்தவையை வியாசர் தொகுத்தார். ரிஷிகளாலும் வேதமந்த்ரங்கள் இயற்றப்படவில்லை. பிரபஞ்சம் உண்டானதில் இருந்தே வேதங்கள் திகழ்கின்றன. ரிஷிகள் அந்தந்த மந்த்ரங்களுக்கு மெய்ப்பொருளை அறிந்தனர்.
வேதம் என்றால் “நல்லறிவு” என்பது பொருள். அனைத்து உயர்அறிவிற்கும் வேதமே அடிப்படை. நம் பாரதத்தின் ஜீவநாடி வேதங்களாகும். வேதங்களை ஒருவன் மருப்பதன்மூலம் அவன் நல்லறிவை இழக்கிறான். சனாதன தர்மத்தில் கடவுளை மறுப்பவன் நாத்திகன் அல்ல. ஆனால் வேதத்தை மருப்பவனே நாத்திகன் ஆவான். ஒருவனுக்கு நம் தர்மத்தில் கடவுளை ஏற்கவும், மறுக்கவும் உரிமை உண்டு. ஆனால் வேதத்தை மறுக்க எந்த உரிமையும் யாருக்கும் இல்லை. வேதங்கள் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தம் என்பது மடமை. வேதம் பாரதத்தின் சொத்து. பாரதியர் அனைவருக்குமே அதில் பாத்யதை உண்டு. உரிமை உண்டு. வேதங்கள் அனைத்துமே நல்லொழுக்கங்களை போதிப்பவை. வேதத்தின் அடிப்படையே உலக நன்மைக்கான யாகங்களும், அகிம்சையும் தான். எந்த ஒரு ஜீவராசியையும் துன்புறுத்த வேதம் அனுமதிப்பது இல்லை. யாகங்கள் உலகநன்மைக்காக செய்யப்படுபவை. அந்த யாகங்களில் பற்பல மூலிகைகள் உபயோகிக்கப்படுகின்றன. அவற்றை செடிகளில் இருந்தோ, மரத்தில் இருந்தோ அப்படியே பரிதுவிடக்கூடாது. மூலிகைகளை பறிப்பதற்கும் சில மந்த்ரங்கள் உண்டு.
“ஹே! மூலிகைகளின் ராஜாவே! சோம தேவனே! நான் உலக நன்மைக்காக இச்செடியில் இருந்து பறிக்கும் மூலிகையால் இந்த தவரதிற்கு எந்த பாதிப்பும், துன்பமும் வராமல் பார்த்துக்கொள்” என்பது அந்த மந்த்ரம். ஓரவிவு தாவரத்திற்கும் தீமை இழைக்ககூடாது என்று என்னும் வேத மாதா, எப்படி உயிர் பலியை ஆதரிப்பாள்?
அனைத்து பூஜைகள், யாகங்களின் இறுதியிலும் “ஸ்வஸ்தி: ப்ரஜாப்ய:” என்ற ஒரு பிரார்த்தனை வைக்கைப்படும் அதன் பொருளாவது,
“அரசன் மக்களை நல்வழிக்கு நடத்தவேண்டும்
மக்களும் நியாயமான மார்கத்தில் நடக்கவேண்டும்/
“பசுக்களும்” அந்தணர்களும் என்றுமே குறைவின்றி இருக்கவேண்டும்
உலகம் அனைத்துமே துன்பமே இல்லாமல் இருக்கவேண்டும்//”
பசுக்கள் என்றைக்குமே குறைவில்லாமல் இருக்கவேண்டும் என்று பிரார்த்திக்கும் தர்மம், எவ்வாறு பசுவதையை ஆதரிக்கும்?
வேததின்மீது அவதூறான பிரச்சாரம்:-
-------------------------------------------------------------------------
கடந்த 1000 ஆண்டுகளில் பாரத தேசம் சந்தித்த மோசமான நிகழ்வுகள் அந்நியமத படைஎடுப்புகளும், கட்டாய மத மாற்றங்களும். பாரதத்தை துருக்கி,பாரசீகம், மற்றும் அரபுநாடுகளில் இருந்து படையெடுத்தவர்கள் ஈவு இரக்கமே இல்லாமல் பல லக்ஷம் மக்களை கொன்று குவித்து அவர்களின் பிணக்குவியலின் மீது தங்கள் சிம்மாசனத்தை நிறுவினர். அன்றைய காலகட்டத்தில் மக்களை அவர்கள் கட்டாயமாக அவர்களது மிலேச்ச மதத்திற்கு மாறுமாறு தங்கள் அதிகார பலத்தினால் வற்புறுத்தினர். உயிருக்கு பயந்து சில மக்களும் அதற்கு அடிபணிந்தனர். ஆனால் பெரும்பாலான மக்கள் அழிவில்லாத சனாதன தர்மத்தினின்று நழுவி மிலேச்ச மதத்தை தழுவுவதை விட உயிரை விடுவதே மேல் என எண்ணினார். முதலில் மக்களை தங்கள் பக்கம் இழுக்க அவர்களின் மத நம்பிக்கைகளை அவைகளிடம் பொய்யாக பிரச்சாரம் செய்தால், தானே அவர்கள் நம்வழிக்கு வந்துவிடுவார் என எண்ணி யுகங்களை கடந்து இயமயம்போல் கம்பீரமாய் திகழும் “வேதங்களை” தங்கள் சுயனலதிர்க்காக பொய்ப்பிரச்சாரம் செய்யத் துவங்கினர். அப்பொழுதுதான் “வேதத்தில் மிருகவதை ஆதரிக்கப்டுகிறது. வேதத்தில் பசுவதை ஆதரிக்கபடுகிறது. இந்திரன் பசு மாமிசத்தை உண்டான். பல ரிஷிகள் பசு மாமிசத்தை உண்டனர். அஸ்வமேத யாகத்தில் குதிரைகள் பலியிடப்பட்டன. புருஷமேத யாகத்தில் மனிதபலி இடப்பட்டன” என்னும் நீசத்தனமான, அருவருக்கத்தக்க, கீழ்த்தரமான பிரச்சாரங்களை செய்து மக்களை வேதத்தின் பாதையில் இருந்து திசைதிருப்பினர். உண்மையை உணர்ந்தோர் இந்த சூழ்ச்சியில் சிக்கவில்லை. பாமரமக்கள் என்றைக்குமே பாவம்.. அணைத்து சூழ்ச்சிகளிலும் சிக்குவது அவர்கள்தான். அதனால்தான் வெள்ளையர்களும் தங்கள் மதத்தை திணிக்க முதலில் பாமர மக்களை குறிவைத்தனர். பறங்கியரும் சளைத்தவர் இல்லை. பாலைவனத்தவர் கட்டாயத்தால் மதமாற்றத்தில் ஈடுப்பனர். பறங்கியர் பணத்தை கொடுத்து மதமாற்றத்தில் ஈடுப்பனர். இவரிறுவருக்கும் இதுவே வித்தியாசம். இவ்விருவருமே வேதத்திற்கு எதிராக பற்பல சூழ்சிகளை கையாண்டனர். அதில் ஒன்று தான் வேததின்மீது அவதூறு பரப்புவது. வேதத்தை பற்றி ஆரம்பித்து பின் ஏன் மதமாற்றைதப்பற்றி பேசி பேச்சை திசை திருப்புக்ரீர் என்கிறீர?
மதமாற்றதிற்காகவே வேதங்களின் மீது அவதூறு பரப்பினர் என்று கூற விழைகிறேன்.
மேலை நாட்டோரும், வேத-விரோதிகளும் வேதத்தில் இருந்து தங்கள் அரைகுறை சம்ஸ்க்ருத புலமையால் தவறாக மொழிபெயர்கப்பட்ட மந்தரங்களின் உண்மையான பொருளையும், வேதத்தில் மிருகவதை இல்லை என்பதையும், குறிப்பாக வேதத்தில் பசுமாமிசம் பற்றி இல்லவே இல்லை என்பதையும் இனிவரும் தொடர் பாகங்களில் பாப்போம்.

No comments:

Post a Comment