Thursday, 28 April 2016

ஆன்மீகம் என்பது பூரண சுதந்திரம் ஆகும்.

ஆன்மீகம் என்பது பூரண சுதந்திரம் ஆகும்.
------------------------------------------------
ஆன்மீகம் என்றாலே பலருக்கும் எதோ பிரமை உண்டு. ருத்ராக்ஷம் அணிவது, திருநீறு பூசுவது, ஆலயம் தொழுவது, விரதம் இருப்பது.................. போன்றவையே ஆன்மிகம் என்று தவறாக கருதி, இருக்கும் அந்த உயர்ந்த உண்மையை அறியாமலேயே பாவம் அனைவரும் செத்தும் போகிறார்கள். இன்றைய சூழலில் ஆன்மிகம் என்பது இதுதான் என தெள்ளதெளிவாக கூறும் ஆற்றல் மிக்கவர்கள் குறைவாகவே உள்ளனர். பணத்திற்கும் பெயருக்கும் புகழுக்கும் இச்சைபூண்டு ஆன்மீகத்தை தவறாக பருப்புபவர்களாகவே அணைத்து நிறுவனர்களும் உள்ளனர்.
ஆன்மிகம் என்றால் எதோ தலையில் கொம்பு முளைத்து, காட்டிலும் மேட்டிலும் மலையிலும் நதிக்கரையிலும் பயித்தியமாய் திரிவது அன்று.
நாம்மை நம் சகஜமான அமைதி நிலைக்கு திருப்பி, நம் வாழ்வை "இயல்பாக" வாழச்செயவதே ஆன்மிகம் ஆகும். ஆன்மிகம் என்றால் "தன்னை அறியும்'' கலையாகும். "நான் யார்?" என்று நம்மை உணரச்செயவதே ஆன்மிகம். நம்மை எதற்கும் கட்டுப்படாத பூரண சுதந்திரர்கலாக வாழும் தயிரியத்தையும், பக்குவத்தையும் தருவதே ஆன்மீகம் ஆகும்.
அனைத்தையும் விட்டுவிடு, உலகத்தை உதறிவிடு, காவி பூண்டுவிடு, சந்நியாசி ஆகிவிடு, பயித்தியமாய் அலைந்துவிடு என்று எந்த "ஆண்மீகவா(வியா)தியாவது" கூறினால் தயிரியமாய் கூறுங்கள் அவர்களுக்கு ஆன்மிகம் என்றால் என்னவென்று இம்மியும் தெரியாது என்று.
உலகிற்கு பயந்து ஓடி மறைவது ஆன்மிகம் அன்று. வானமே இடிந்து உங்கள் தலையின்மீது விழுந்தாலும், தயிரியமாய் அதை எதிகொள்வதே ஆன்மிகம்.
எதற்கும் அஞ்சாமல், தர்மத்தில் பாதையில் வீறுநடைஇட்டு வாழ்வை வாழ்வதே ஆன்மிகம்.
மரணமே எதிரில் நின்றாலும் துளியும் அச்சம் இல்லாமல் இருப்பதே ஆன்மிகம்.
மூச்சை நிறுத்துவதோ, குண்டலினியை எழுப்புவதோ, வாசியை உயர்த்துவதோ, அட்டமாசித்திகளை அடைவதோ, சமாதி என்ற பெயரில் தற்கொலை செய்வதோ,................. வேறு எதுவுமே ஆன்மீகத்தின் முடிவு அன்று. மாறாக எதற்கும் அடிமையாய் இல்லாமல் பூரண சுதந்திரறாய், எதற்கும் அஞ்சாமல், மனதின் எழுச்சிக்கு சிறிதும் இடம்கொடாமல், அமைதியாய் வாழ்வதே ஆன்மிகம்.
ஆன்மீகத்தில் முழுமையை எய்தியவன் எந்த செயல் செய்ய நேர்ந்தாலும், அச்செயலில் சிறிதும் விருப்போ வெறுப்போ இல்லாமல் இருப்பான்.
யாரிடமும் நட்போ பகைமையோ பாராட்டாமல் இருப்பான்,
நன்மை தீமை எனும் இரட்டையின்றும் விடுதளையுற்று இருப்பான்.
சொல்லாலும், எழுத்தாலும் விவரிக்க முடியா அவன் நிலையை அவனைப்போன்றோரே அறிவர்

1 comment: