Thursday 28 April 2016

நமது உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை


நமது உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை




நமது பாதங்கள் சக்திவாய்ந்தவை. உடல் உள்ளுறுப்புகளின் நரம்புகள் நமது பாதத்தில் முடிகின்றது. சீன மருத்துவத்தில் இதை மெரிடியன் என்று சொல்லுவார்கள். இந்த மெரிடியன்கள் நமது உள்ளுறுப்புகளின் பாதையாக செயல்படுகிறது. சிலர் இதை மறுப்பதுண்டு. ஆனால் சீன மருத்துவத்தை கற்றவர்களும், அறிந்தவர்களும் மெரிடியனும் நமது நரம்பு மண்டலங்களும் ஓன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை என்பதை அறிவார்கள்.

நீங்கள் நரம்புமண்டலங்கள் உண்டு என்று நம்பினால் மெரிடியன்களையும் நம்பித்தான் ஆகவேண்டும். நமது பாதத்தில் உள்ள 7000 நரம்புமண்டலங்களின் முடிவுகள் உடல் உள்ளுறுப்புகளுடன் தொடர்புள்ளவை. இவற்றை சக்திவாய்ந்த மின்சார சுற்றுகள் (circuit) என்றும சொல்லாம். நாம் காலணிகள் அணிந்து கொள்வதால் பாதத்திற்கோ அல்லது நரம்பு மண்டலங்களுக்கோ சரியான அழுத்தம் கிடைப்பதில்லை. எனவே மெரிடியன்கள் எப்பொழுதும் செயலற்ற நிலையில் உள்ளது. காலணிகள் இல்லாமல் நடக்கும் போது இந்த மெரிடியன்கள் தூண்டப்படுகின்றன.

வெங்காயமும், பூண்டும் இந்த மெரிடியன்களை எளிதானமுறையில் ஊக்கிவிக்கவும், நமது உடலுறுப்புகளை சுத்தம் செய்யவும் உதவுகிறது. இவற்றை உட்கொள்ளமாலே வெளிப்புறமாக ஊக்குவிக்க வெங்காயத்தையும், பூண்டையும் வட்டாமாக நறுக்கி படுப்பதற்க்கு முன் நமது பாதத்தின் அடியில் அழுத்தும் பெறும் வகையில் வைத்து காலுறைகளை அணிந்து கொள்ளலாம். இந்த முறையில் வெங்காயமும், பூண்டும் எந்த முறையில் செயல்படுகிறது என்று பார்ப்போம்.

வெங்காயமும், பூண்டும் கிருமிகளை ஈர்ப்பவை. காற்று மண்டலத்தை சுத்தம் செய்கின்றன. தீய பாக்டீரியாக்களை ஈர்த்து அழிக்கின்றன. அதனால்தான் நறுக்கிய வெங்காயத்தை நீண்டநேரம் வெளியில் வைத்தோ, பிரிட்ஜில் வைத்தோ உபயோகிக்ககூடாது என்று சொல்லப்படுகின்றது. வெங்காயம் நறுக்கும் போது கண்ணீரை வரவழைக்கும் வெங்காயத்திலுள்ள பாஸ்பாரிக் ஆசிட் நமது இரத்தநாளங்களில் நுழைந்து சளி, காய்ச்சல், ஃபுளு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கின்றது.

இயற்கை முறையில் விளைந்த ஆர்கானிக் வெங்காயத்தை உபயோகிப்பதே நல்லது. காரணம் இரவில் முழுவதும் உங்கள் பாதங்களின் அடியில் இருப்பதால் தேவையற்ற இரசாயனங்களும், பூச்சிகொல்லிகளும் நமது உடலில் உட்புகாது.

இவ்வாறு செய்யும் போது வெங்காயத்தின் சாறு தோல் மூலமாக உடலில் ஊடுறுவி (transdermal application) இரத்தநாளங்களில் ஈர்த்து தீய பாக்டீரியாக்களை அழிப்போதோடு அல்லாமல் உங்கள் அறையையும் சுத்தமாக்குகின்றது. இங்கிலாந்தில் பிளேக் நோய் தொடங்கும் காலங்களில் இந்த முறையை செய்து பாதுகாத்து கொண்டார்கள்.

1 comment:

  1. அதிகாலையில் பல் துலக்கியபின், இரண்டோ, மூன்றோ வெங்காயம் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுக்குள் வைத்துவிடும்.
    மேலும், எந்த ஒரு பொருளையுமே, ஃபிரிட்ஜில் வைக்காமல், சமைத்து சாப்பிடப் பழகுங்கள். முடிந்தவரை, உழவர் சந்தையில், வாங்கும் காய்கள், அப்போதே தோட்டத்தில் பறித்து வரக்கூடிய காய்கள். அதை வாங்கி, சமையுங்கள். மீதம் உள்ள காய்களை ஒரு பெரிய ஈரத்துணியில், நீரை நன்கு பிழிந்து விட்டு, அந்த காய்களை அதற்குள் வைத்து லேசாக மூடிவிடுங்கள். ஒரு வாரம் வரை வாடாது, கெட்டுப்போகாது. ஃப்ரிட்ஜில் வைத்தால், காயிலுள்ள இயற்கை சத்து நமக்கு கிடைக்காது. சிலர் வீட்டில் நாளை சமையலுக்கு, இரவே காய்கனிகளை நறுக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, மறுநாள் சமைக்கிறார்
    கள். மிகப் பெரிய தவறு.
    அதாவது பெண்கள், பின் தூங்கி முன் எழ வேண்டும். அதென்னவென்றால், இரவில் சாப்பிட்டு,"கணவர்"தூங்கீயபின், மனைவி, அனைத்தும் மூடி வைக்கப் பட்டுள்ளதா, கதவு பூட்டப்பட்டுள்ளதா? பிள்ளைகள் நல்லமுறையில் உறங்குகிறார்களா,என்ற விழிப்புணர்
    வோடு, எல்லாம் சரிபார்த்த பின் மனைவி தூங்கி, அதிகாலை கணவர் எழும் முன், மனைவி குளித்து, அதன் பின் நறுக்க வேண்டிய காய்களை நறுக்கி சமைத்தலே நலம். நாம் சமைத்த உணவுகள் மீதமிருந்தால், நன்கு சுட வைத்து சாப்பிடலாமே தவிர, ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள், அதை சுட வைத்தோ, அல்லது குளிர் தன்மை போக விட்டோ நாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குளிர்சாதனம் தேவை தான், அதை குளிர்பானம் வைத்துக்கொள்ள, மற்றும்,புளிக்க வைக்கப்படாத, தோசை மாவு வைத்துக்கொள்ள மட்டுமே பயன்படுத்தினால் நலம். இதற்கு முன்பு, நம் பெற்றோர்கள் இப்படித்தானே வளர்த்தார்கள் என்பதை நினைவு கூறுங்கள். செயல்படுங்கள்.

    எத்தனை செல்வங்கள் உங்களுக்கு இருந்தாலும், *நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்* என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது.

    என்றும் நட்புடன் ஜான்ஸி ஹெப்ஸிபா.

    ReplyDelete