Thursday, 28 April 2016

உலகில் நாம் பிறந்தது நம்மை நாம் திருத்திக்கொள்ளவே. உலகம் திருந்துவது நம் வசம் இல்லை

உலகை திருத்த நினைக்கும் கடமை வீரர்களே!! இது உங்களுக்கு.
--------------------------------------
உலகத்தை முற்றிலும் திருத்திவிடுகிறேன் பார். என்று வீறுகொண்டு எழுந்த அணைத்து மகநீயர்களுக்கும் கிடைத்த கொடை ஒன்றுதான். “தோல்வி”.
துவாபரயுகத்து அயோத்தியாண்ட பகவான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி துவங்கி இன்று உங்களவரை உலகை சீர்திருத்தம் செய்ய புறப்பட்டவர்கள் அனைவருக்கும் மிஞ்சியது ஒன்றுதான். “விரக்தி”.
ஏன்?
உலகத்தின் போக்கை மற்ற எந்த கொம்பனுக்கும் ஆற்றல் இல்லை.
அது நீங்கள் கூறும் அவதாரங்களாக இருந்தாலும் சரி. இறை குமாரர்களாக இருந்தாலும் சரி. இறை தூதர்களாக இருந்தாலும் சரி. உலகை திருத்த நினைத்தால் யாராயிருந்தாலும் சரி, மிஞ்சுவது “ஏமாற்றம் தான்”.
பூமியில் தீயவர்களின் எண்ணிக்கை பெருகியதால், பூமாதேவி பசுவின் வடிவம் கொண்டு பிரம்மாவிடம் முறையிட்டாலாம். பிரம்மாவும், தேவர்களும், பூமாதாவும் திருமாலிடம் சரணடைய, திருமால் பூமியின் பாரத்தை குறைக்க ஸ்ரீகிருஷ்ணாவதாரம் கொண்டாராம். உலகின் பெரும் மக்கட்தொகை பரத போரில் அழிந்தும், தீமை அழிந்துவிட்டதா என்ன? தர்மம் நிலைத்துவிட்டதா என்ன?
கடவுளாம் கிருஷ்ணரின் உறவினர் எல்லாம், மதுவின் போதையில் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு வம்சமே அடியோடு அழிந்தது.
நீங்கள் கூறும் தெய்வங்களாலும் உலகத்தின் போக்கை மாற்ற இயலாது.
மக்கள் ஒருவருக்கொருவர் சமாதானம் இல்லாமல் இருந்ததால், உலகில் சமாதானத்தை நிலைநாட்ட இறைவனால் உலகிற்கு அனுப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கும் உலகை சீர்செய்யும் வெற்றி கிட்டவில்லையே. எவ்வளவுதான் அமைதியாய் இருங்கள் என்று தேவகுமாரன் கூறினாலும் யாரும் கேட்கவில்லையே. இறுதியில் அவரையும் சிலுவயில்தானே அறைந்தனர்.
மக்கள் மூட நம்பிக்கையிலும், மூர்கத்தனதிலும் அடிமையானதால் அவர்களை சீர்திருத்த இறை தூதர் மூகம்மது நபி வந்தாராம். அன்பின் மார்க்கத்தை தோற்றுவித்தார். ஆனால் அதன் இன்றைய நிலை? எங்குபார்த்தாலும் அன்பின் பெயரில் வன்முறை. மார்க்கம் உருவானதோ அன்பின் பெயரில். அனால் உலகின் போக்கு அதை எப்படி மாற்றிவிட்டது?
நீங்கள் கூறும் இறைதூதர்களும் உலகை சீர்திருத்துவதில் தோல்வியையே கண்டனர்.
சுவாமி விவேகானதர் தனது இறுதிநாட்களில் கூறுகிறார், “உலகில் இத்தனை சேவை செய்தபிறகே நான் புரிந்துகொண்டேன், உலகம் நாயில் வாலைப்போல என்று. நாயின் வாலையும் நிமிர்த்த முடியாது. உலகையும் திருத்த முடியாது” என்று.
உலகில் நாம் பிறந்தது நம்மை நாம் திருத்திக்கொள்ளவே. உலகம் திருந்துவது நம் வசம் இல்லை. ஆனால் நாம் திருந்துவதே நம் கையில் உள்ளது. மற்றவரின் முதுகில் உள்ள அழுக்க சுத்தம் செவது இருக்கட்டும். நம் முதிகிலேயே வண்டி அழுக்கு. இதில் என்ன மற்றவரை திருத்துவது. முதலில் நாம் திருந்துவோம். பிறகு உலகை திருத்த யோசிப்போம்,.

1 comment: