Saturday, 29 April 2017

கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..! - செல்வம் பெருகும்....

கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..! - செல்வம் பெருகும்....
கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை மகா லட்சுமி தாயார் பிடித்து விடுவதாக பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களைப் பார்த்திருப்போம். மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் தம்பதி சமேதரராக இருப்பதால் இதை நாம் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இதில் மாபெரும் ஒரு உண்மையை நமது முன்னோர் மறைத்து வைத்திருக்கிறார்கள். அதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில் சொத்து பத்து சேரும் என்ற உண்மையை மறைத்து வைத்துள்ளனர். ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு கீழ் வருகின்றது. அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக வகுத்துவைத்துள்ளனர்.

ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும். எனவேதான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள், ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் நமது முன்னோர்கள். கால மாற்றத்தால் ஆண் அதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்ற பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளால் இம்முறைக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் உன்னதமான இந்த நிகழ்வு தற்போது மறைந்து விட்டது வேதனைதான்......

1 comment: