Saturday, 29 April 2017

வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு..

வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு..
பெண்கள், தூங்கி எழுந்து வீட்டின் வாசல் கதவை திறக்கும்போது, அஷ்டலட்சுமிகளின் திருநாமத்தை உச்சரித்தபடி திறக்க வேண்டும். அவ்வாறு செய்வதால், அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் நுழைவார்கள்.
* பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் மூன்றாம் மாதம் முதல், அவர்களது கணவர் கடலில் குளிக்கக் கூடாது.
* குடும்ப உறுப்பினர்கள் வெளியில் புறப்பட்டுச் செல்லும் பொழுது, ‘எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்கக் கூடாது. புறப்படுவதற்கு முன்னதாகவே கேட்டுக் கொள்வது நல்லது.
* குழந்தைகளைப் பார்த்து ‘நீ அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையா?’ என்று பாரபட்சம் காட்டி பேசக்கூடாது. ‘அந்தக் குழந்தை அப்படியிருக்கிறது. இந்தக் குழந்தை இப்படி இருக்கிறது.
நீ ஒன்றுக்கும் லாயக்கில்லை’ என்று பிற குழந்தைகளோடு நம்முடைய குழந்தைகளை ஒப்பிட்டு பேசுவதையும் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடும்.
* கணவன்-மனைவியை அழைக்கும் பொழுது, பெயர் சொல்லி அழைக்கலாம். அல்லது ‘அம்மா’ என்றழைக்கலாம். ‘வாடி, போடி’ என்று அழைக்கக்கூடாது. ‘வாடி’ என்றால் வாடுதல், வதங்குதல் என்று பொருள். ‘போடி’ என்றால் செல்வம் போய்விடும்.
* அதிகாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரையிலான நேரத்தை ‘பிரம்ம முகூர்த்தம்’ என்பார்கள். இந்த நேரத்தில் எழுந்து பாடங்களைப் படித்தால் மனதில் நன்கு பதியும்.
* மூன்றாம் பிறை சந்திரனைக் காண்பது சிறப்பு.
* வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு எப்பொழுது குங்குமம் கொடுத்தாலும், முதலில் நீங்கள் நெற்றியில் இட்டுக்கொண்டு பிறகு வந்தவர்களுக்கு கொடுக்கவும்.
* பெண்கள், தூங்கி எழுந்து வீட்டின் வாசல் கதவை திறக்கும்போது, அஷ்டலட்சுமிகளின் திருநாமத்தை உச்சரித்தபடி திறக்க வேண்டும். அவ்வாறு செய்வதால், அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் நுழைவார்கள்.
* வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு. இதனால் சகல செல்வங்களும் சேரும்.
* வாகனத்தின் மீது அமர்ந்து சாப்பிடக் கூடாது.

1 comment: