Saturday, 29 April 2017

ராம நாம மகிமையும் ,,,,,விபீஷணன் கூறிய பொய்யும்

ராம நாம மகிமையும் ,,,,,விபீஷணன் கூறிய பொய்யும் ------ஆஞ்சநேயரை பிரம்மாஸ்திரத்தால் சிறை பிடித்த இந்திரஜித் சபையில் ராவணன் முன் கொண்டு வந்து நிறுத்தினான் ,,,,,,,ஆஞ்சநேயர் ராவணனுக்கு பல நல்ல அறிவுரைகள் எடுத்துரைத்தார் ,,,,அதை அலட்சியம் செய்த ராவணன் ஆஞ்சநேயரை கொல்ல உத்தரவிட்டான் ,,,,,ராவணனின் தம்பியான விபீஷணன் ராவணன் உத்தரவை தடுத்து நிறுத்தி ---அண்ணா தூதுவராக வந்தவரை கொள்வது அரச தர்மம் அல்ல என்று எடுத்து சொன்னவுடன் சற்று கோபம் தணிந்த ராவணன் நம் அரியணைக்கு நிகராக இந்த குரங்கு தன் வாலைத்தானே அறியணையாக சுற்றி அதன் மேல் அமர்ந்து எனக்கு அறிவுரை கூறியது அதனால் வாலில் துணியை சுற்றி வைத்து நெய்யுற்றி தீ பற்ற வைத்து விடுங்கள் வெப்பத்தினால் துடிக்கட்டும் என்று கட்டளை இட்டான் ,,,,,காவலர்களும் அப்படியே செய்து ஆஞ்சநேயரின் வாலில் தீ மூட்டி விட்டனர் ,,,,இதை அசோகவனத்தில் இருந்த சீதை கேள்விப்பட்டதும் ,,,உடனே அக்னி தேவனை வேண்டினாள் நான் தர்மபத்தினி என்பது உண்மையானால் அக்னியான நீ ஆஞ்சநேயனுக்கு நீ வெப்பத்தை தவிர்த்து குளிர்ச்சியை கொடு என்று மனதார வேண்டிக்கொண்டாள் அக்னியும் ஆஞ்சநேயருக்கு வெப்பத்தை தவிர்த்து குளிர்ச்சியை கொடுத்தான் ,,,,தன் வாலில் கொளுத்திய நெருப்பு தனக்கு குளிர்ச்சி கொடுப்பதையும் அதற்கு காரணம் அன்னை ஜானகி தேவிதான் என்பதையும் அறிந்த ஆஞ்சநேயர் மனமார அன்னையை வணங்கி இலங்கையை எரிக்க துவங்கினார் ,,,,,,இலங்கையில் ஒரு இடம் விடாமல் எல்லா இடங்களையும் எரித்த ஆஞ்சநேயர் கடைசியாக தன் வாலின் நெருப்பை அணைத்து விட்டு சீதையை மறுபடியும் ஒரு முறை சந்தித்து விட்டு ஆறுதல் கூறி கிஷ்கிந்தை நோக்கி பறந்தார் வானில் ....அழகிய இலங்கை நகரம் எரிந்து அலங்கோலமாக காட்சியளித்தது எறிந்த இடங்கள் அனைத்தையும் ராவணன் கோபமாக பார்வையிட்டான் ,.....அதில் சீதை இருந்த அசோகா வனமும் தன் விபீஷணன் மாளிகையும் மட்டும் நெருப்பில் எரியாமல் அப்படியே இருப்பதை கண்டு வியந்த ராவணன் சீதை இருக்குமிடத்தை ஆஞ்சநேயர் எரிக்க வில்லை சரி ,,,,ஆனால் தன் தம்பி விபீஷணன் மாளிகையும் எரியாமல் இருக்கிறதே என்ன காரணமாக இருக்கும் என்று நினைத்து காரணம் அறிய விபீஷணன் மாளிகைக்குள் நுழைந்த ராவணனுக்கு கோபம் வந்தது காரணம் மாளிகை முழுவதும் ஸ்ரீ ராம ஜெயம் என்று எழுதியிருந்தது ,,,கோபமாக விபீஷணனை அழைத்து வர உத்தரவிட்டான் ,,,,விபீஷணன் அழைத்து வரப்பட்டதும் என் தம்பியான நீ என் எதிரியான ராமனின் பெயரை அல்லவா உன் மாளிகைக்குள் எழுதி வைத்திருக்கிறாய் ,,,,,என் தம்பியாக இருந்து இப்படி எனக்கே துரோகம் செய்யலாமா என்று கோபமாக கேட்டான் ,,,,,விபீஷணன் மனதிற்குள் ராமரை நினைத்தான் ,,,,,உடனே ஒரு யோசனை தோன்றியது அண்ணா உண்மையில் அது ராம நாமம் கிடையாது தங்களது திருநாமம் ,,,,ராவணனுக்கு கோபம் வந்தது என்ன என் திருநாமமா தப்பித்து கொள்வதற்கு பொய்யுரைக்கிறாயா ,,,விபீஷணன் இல்லை அண்ணா உண்மையைத்தான் சொல்கிறேன் ----தங்களது திருப்பெயர் ராவணன் ,,,,,,,,அண்ணியாரின் திருப்பெயர் மண்டோதிரி ------உங்களுடைய திருப்பெயரின் முதல் எழுத்தான ரா வும் அண்ணியாரின் திருப்பெயரின் முதல் எழுத்தான ம வும் சேர்த்து ராம என்று இணைத்து அதோடு ஸ்ரீ சேர்த்து ஸ்ரீ ராமஜெயம் என்று எழுதினேன் அதனாலே என் மாளிகை நெருப்பில் இருந்து தப்பியது என்று கூறினான் இப்பொழுது ராவணனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை நம் பெயருக்கு இவ்ளோ மகிமை இருக்கிறதா என்று நினைத்து சந்தோசப்பட்டு கொண்டே அரண்மனை நோக்கி சென்றான் ,,,,,விபீஷணன் நிம்மதி பெருமூச்சு விட்டு ராமரை மனதார சேவித்தான்,,,,,நண்பர்களே உண்மையில் ராம நாமம் மிகவும் சக்தி வாய்ந்தது ,,,முடிந்தளவு ராம நாமம் சொல்லுங்கள் ,,,,,,நன்மைகள் பல பெறுங்கள்

No comments:

Post a Comment