Monday, 5 June 2017

ஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது.



ஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது.
பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம்கொடுத்து
சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு.
ஒரு குழந்தையை தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரிய வாயுவிற்கு `சடம்' என்று பெயர்.
வைணவ பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் நம்மாழ்வார்.
நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் வேதம் தமிழ் செய்த மாறன் என்று புகழப்படுகிறார். இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர்.
நம்மாழ்வார் கலி பிறந்த 43 வது நாளில் காரியார் மற்றும் உடைய நங்கைக்கு மகனாகப் பிறந்தார்.
உலக வழக்கப்படி குழந்தை பிறந்தவுடன் அழும். ஆனால் இவரோ இவை எவற்றையும் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்தார். எனவே அவரை மாறன் என்று அழைத்தனர்.
ஒவ்வொரு உயிரினமும் இந்நிலவுகில் பிறக்கும்பொழுது, அதன் உச்சந் தலையில் முதன் முதலாக இந்நிலவுலகக் காற்று படும்.
இக்காற்று பட்டவுடன், அக்குழந்தைக்கு முன் ஜென்ம நினைவுகள் மறக்கும்.
மீண்டும் இந்நிலவுலக மாயையில் சிக்கிக் கொள்ளும் என்பது ஐதீகம். மாயையை உருவாக்கும் சடம் என்னும் இக்காற்று உச்சந்தலையில் படுவதாலேயே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகின்றன என்று சொல்லப்படுகிறது.
சடவாயுவின் சேர்க்கையினாலே நம் மனம் பக்தியில் ஈடுபடுவதில்லை.
ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வார்
தம் தாயின் கருப்பையில் இருக்கும்போதே தம்மைச் சேர வந்த அந்த
சடம் என்னும் இக்காற்றை கோப மாக முறைத்ததால் சடகோபன் என்று அழைக்கப்படுகிறார்.
பிறவிச்சூழலில் இருந்து விடுதலை பெற்றதால் பரந்தாமனையே நினைந்து வாழ்ந்து வந்தார். இவரை திருமாலின் திருவடி அம்சம் என்றும் கூறுவதுண்டு.
அதனால், பெருமாள் சன்னதியில் பெருமாளின் திருவடியில் இருப்பதும் சடகோபம் (சடாரி) என்று பெயர் பெறுகிறது.
சடாரியை தலையில் தாங்கினால், நம் மனம் பந்தபாசங்கள் நீங்கப் பெற்று பக்தியில் திளைக்கும்.
சடம் + ஹரி ( பாதம் ) சடாரி என்று அழைக்கப்படுகிறது.
ஆகவே சடாரி எனப்படும் நம்மாழ்வாரையே பெருமாளின் திருப்பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சார்த்தப்படுகிறது.
எனவேதான் சடாரி நம் தலையில் வைக்கும் பொழுது பேரானந்தம் நம் மனதில் ஏற்படுகிறது.
சடாரி வைக்கும் பொழுது பணிந்து புருவங்களுக்கு நடுவில் வலக்கை நடுவிரல் வைத்து நாசி , வாய் பொத்தி குனிந்து பெருமாளின் திருபாதத்தினை ஏற்றுகொள்ள வேண்டும்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete