Monday, 5 June 2017

திருதிராட்டிரன்

திருதிராட்டிரன் பார்வையற்றவனாய் இருந்த படியால்... குருகுலத்து ஆட்சியை.. பாண்டுவே நடத்தி வந்தான் என்பதால்... பாண்டு புத்திரர்களிடம் மக்களுக்கு நாட்டம் அதிகம் இருந்தது. இச்சமயத்தில் அஸ்தினாபுரத்து அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டன. அரசகுமாரர்களில் யுதிஷ்டிரர் மூத்தவர் ஆனபடியால்... இளவரசர் பட்டத்துக்கு அவரே.. உரியவர் ஆனார். பீஷ்மர்,துரோணர்,விதுரர் ஆகியோர்.. யுதிஷ்டிரரை இளவரசர் ஆக்கினர்.
இவர் சத்தியத்திற்கும், பொறுமைக்கும்.. இருப்பிடமாக இருந்தார். அவரது தம்பிகளும்.. நாட்டின் எல்லை விரிவடைய உதவினர். பாண்டவர்கள் உயர்வு கண்டு... துரியோதனன் மனம் புழுங்கினான். விரைவில் யுதிஷ்டிரர் நாட்டுக்கு மன்னன் ஆகிவிடுவாரோ என எண்னினான். தன் மனக்குமுறலை சகுனியிடமும், துச்சாதனனிடமும், கர்ணனிடமும் வெளிப்படுத்தினான்.
அதற்கு சகுனி, 'பாண்டவர்களை சூதில் வெல்லலாம்' என்றான். நீண்ட யோசனைக்குப் பிறகு.. எப்படியாவது பாண்டவர்களை அஸ்தினாபுரத்திலிருந்து வெளியேற்ற தீர்மானித்தனர்.
துரியோதனன்.. தன் தந்தையிடம் சென்று.. 'தந்தையே.. யுதிஷ்டிரனை.. இளவரசனாக நியமித்து.. தவறு செய்து விட்டீர். அதனால்... பாண்டவர் இப்போது.. ஆட்சியுரிமைக்கு.. முயல்கின்றனர். ஆகவே என்மீதும், தம்பியர் மீதும்.. உங்களுக்கு அக்கறை இருக்குமேயாயின், பாண்டவர்களை சிறிது காலமாவது .. வேறு இடம் செல்லக் கூறுங்கள்' என்றான்.
அவன் மேலும் கூறினான்.. 'கதா யுத்தத்தில்.. என்னை பீமன் தாக்கிய போதும், எங்கள் சார்பில் யாரும் பேசவில்லை. பாட்டனாரும், துரோணரும், கிருபரும் கூட மனம் மாறி பாண்டவர் பக்கம் போனாலும்
போவார்கள். விதுரர்.. பாண்டவர் பக்கமே.. இப்போதே.. பாண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அதன் பின் மக்களை நம் பக்கம் திருப்பி.. நம் ஆட்சியை நிலை பெறச் செய்யலாம்' என்றான்.
மகனைப்பற்றி நன்கு அறிந்த திருதிராட்டிரன்.. அவனுக்கு பல நீதிகளைக் கூறி..'உனது துரோக எண்ணத்தை விட்டுவிடு' என்று அறிவுரை கூறினான்.
எந்த நீதியும்.. துரியோதனன் காதில் விழவில்லை. கடைசியில் மகன் மீது இருந்த பாசத்தால்.. பாண்டவர்களை வாரணாவதம் அனுப்ப ஒப்புக்கொண்டான்.துரியோதனன் மூளை குறுக்கு வழியில் வேலை செய்ய ஆரம்பித்தது.
அவன் நாட்டில் சிறந்த சிற்பியும்.. அமைச்சனும் ஆன.. புரோசனனைக் கொண்டு.. வாரணாவதத்தில் ரகசியமாக அரக்கு மாளிகை ஒன்றை அமைக்க தீர்மானித்தான்.. அது எளிதில் தீப்பற்றி எறியக்கூடியதாய் இருக்க வேண்டும்.அதில் குந்தியையும். பாண்டவர்களையும் தங்கச் செய்து.. அவர்கள் தூங்கும் போது.. அம்மாளிகையை தீயிட்டு கொளுத்தி.. அவர்களை சாம்பலாக்க வேண்டும் என்று தீர்மானித்து, புரோசனனைக் கூப்பிட்டு.. வேண்டிய பொருள்களைக் கொடுத்து... அரக்கு மாளிகை அமைக்க வாரணாவதம் அனுப்பினான்.
திருதராட்டிரன் யுதிஷ்டிரரை அழைத்து.. 'வாழ்வதற்கு ஏற்ற இடம் வாரணாவதம்.. நீ உன் தாய், தம்பிகளுடன் சென்று, சில காலம் தங்கி விடு' என்றார்.
புத்திசாலியான.. யுதிஷ்டிரருக்கு.. அவரது எண்ணம் புரிந்தது.பீஷ்மர், துரோணர்,விதுரர் ஆகியோரிடம் ஆசி பெற்று அவர்கள் செல்லலாயினர்.
பாண்டவர்களுடன் விதுரர்.. நெடுந்தூரம் சென்றார்.. துரியோதனின் நோக்கத்தை மறைமுகமாக..'காடு தீப் பற்றி. எரியும் போது.. எலிகள் பூமிக்குள் உள்ள வளையில் புகுந்து தப்பிவிடும்" என்றார். இந்த எச்சரிக்கையை பாண்டவர்கள் புரிந்துக் கொண்டனர். பின் விதுரர் நகரம் திரும்பிவிட்டார்.
வாரணாவதத்து மக்கள்.. பாண்டவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். புரோசனன் அவர்களை அணுகி தான் அமைத்திருக்கும் அரக்கு மாளிகையில் தங்குமாறு.. வேண்டினான். பாண்டவர்கள்.. ஏதும் அறியாதவர்கள் போல..அங்கு தங்கினர்.
அந்த மாளிகை.. அரக்கு,மெழுகு போன்ற பொருள்கள் கொண்டு.. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.
துரியோதனன் எண்னத்தைப் புரிந்துக்கொண்ட பீமன் 'இப்போதே.. அஸ்தினாபுரம் சென்று.. துரியோதனனுடன் போர் புரிய வேண்டும் என துடித்தான். 'துரியோதனனின் சூழ்ச்சியை முறியடிப்போம்.. பொறுமையாய் இரு' என யுதிஷ்டிரர் கூறினார்.
பகலில் வேட்டையாடச் செல்வது போல.. மாளிகையைச் சுற்றி.. ரகசிய வழிகளை அடையாளம் கண்டுகொண்டார்கள் அவர்கள்.
விதுரர்.. பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு.. ஒருவனை அனுப்பினார். பகல் நேரத்தில்.. புரோசனனை அழைத்துக் கொண்டு.. காட்டுக்கு அவர்கள் செல்லும் போது.. அந்த ஆள் .. மாளிகையிலிருந்து வெளியேற சுரங்கம் ஒன்றை அமைத்தான்.
குந்தியும், பாண்டவர்களும் தூங்கும் போது.. இரவில்.. அரக்கு மாளிகையை தீயிட புரோசனன் எண்னினான்.
குந்தியைக் காண.. ஒரு வேட்டுவச்சி.. தனது.. ஐந்து மகன்களுடன் வந்தாள். அவர்களுடன் விருந்து உண்டு.. அங்கேயே அன்றிரவு தங்கினாள்.. வேடுவச்சி.
பீமன் நள்ளிரவில்.. தாயையும், சகோதரர்களையும்.. சுரங்க வழியாக சென்றுவிடுமாறு கூறிவிட்டு.. மாளிகையின் அனைத்து பகுதிகளிலும்..தீ வைத்து விட்டு.. தப்பினான்.
பாண்டவர்கள்.. குந்தியுடன்..சுரங்கம் வழியே வெளியேறி.. ஒரு காட்டை அடைந்தனர். விதுரரால் அனுப்பப்பட்ட.. ஒரு படகோட்டி.. அவர்கள் கங்கையைக் கடக்க உதவினான். பாண்டவர்கள் முன் பின் தெரியாத ஒரு நாட்டை அடைந்தனர்.
இதற்கிடையே.. அரக்கு மாளிகை எரிந்து... ஏழு சடலங்களையும் கண்டவர்கள்.. குந்தி, பாண்டவர்கள், புரோசனன் ஆகியோர் இறந்தனர் என எண்ணினர்.
பீஷ்மரும் இது கேட்டு பெரிதும் துக்கம் அடைந்தார். திருதராட்டிரனும் துயருற்றவன் போல நடித்தான்.. பாண்டவர்களுக்கு ஈமச் சடங்குகளை செய்து முடித்தனர்.

No comments:

Post a Comment