Monday, 26 June 2017

வீடு கிரகப்பிரவேசம் ஆனி மாதத்தில் வைக்கலாமா???

வீடு கிரகப்பிரவேசம் ஆனி மாதத்தில் வைக்கலாமா???
--------------------------------------------------------
🏠 சூரியன் தனது சுழற்சிக் காலத்தில்,மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஆனி மாதம் என்று அழைக்கப்படுகிறது.
🏠 ஆனிமாதம் என்பது கோவில் விழாக்களுக்கு உகந்ததாகும்.
இம்மாதத்தில் திருமணம் செய்தவர்களை தனிக்குடித்தனம் வைக்கவும், வீடு பால் காய்ச்சுவதற்கும், வீடு கிரகபிரவேசம் செய்யவும் உகந்தது அல்ல.
🏠 ஆனிமாதம் கோவில் விழாக்கள், கும்பாபிஷேகங்கள் நடத்த உகந்த மாதமாகும்.
இந்த ஆனி மாதத்தில் இறைவனுக்கு விழா நடத்தினால் பலன் உடனடியாக கிடைக்கும்.
🏠 ஆனி அடி போட்டாலும் கூனிக் குடியேறாதே! என்ற பழமொழிக்கேறப ஆனி மாதத்தில் அடி போடுவதும், பங்குனி மாதத்தில் குடியேறுவது கூடாது என்று கூறுகிறார்கள்.
ஆகையால் ஆனி மாதத்தில் வீடு கட்டத் தொடங்கக் கூடாது, புதுவீடு குடியேறவும் கூடாது.
🏠 மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை,ஆனி மாதத்தில் இழந்ததால் இம்மாதத்தில் கிரகபிரவேசம் அல்லது புது வீடு குடி பெயர்ந்தால் அந்த குடும்பம் துன்பமும் துயரமும் அடையும்.
🏠 இந்த ஆனி மாதத்தில் சுப காரியங்கள் செய்வதையும் தவிர்ப்பது நல்லது.
வீட்டின் இரண்டாவது பிள்ளையாக இருந்தால் திருமணம் செய்யலாம் என கூறுகிறார்கள்.
----------------------------
வீடு குடிபோக:
🌟 சித்திரை
🌟 வைகாசி
🌟 ஆவணி
🌟 ஐப்பசி
🌟 கார்த்திகை
🌟 தை
இம்மாதங்கள் வீடு குடியேற ஏற்ற மாதங்கள் ஆகும்.

1 comment: