பீட்சா தெரியும்...ஆனா, காசிமேடு அட்லாப்பம் தெரியுமா..? #NewSnack
'ஒன் மீடியம் மார்க்ரின் பீட்சா வித் டபுள் சீஸ்... அண்ட் மயொனைஸ் பெப்பர் மிட்...’ என ஸ்டைலிஷ் ஆக ஆர்டர் செய்து சாப்ட்டிருப்பீங்க. ஆனா, அந்த ஸ்டைலிஷ் பீட்சாவுல என்ன சத்து இருக்கும்னு எப்போதாவது யோசிச்சிருப்போமா?
‘எதுக்கு சார், மைதா மாவு போட்டு வெந்தும் வேகாமலும் திண்ற. நம்ம ஏரியா பக்கம் வா சார்...சூடா கண்ணு முன்ன அட்லாப்பம் செஞ்சி தாரேன்..’ எனக் கூவி அழைத்த நாயகம் அக்காவின் ரெஸ்ட்டாரண்ட், காசிமேட்டுல ரோட்டோர செட்-அப்பில் அமைஞ்சிருக்கு.
அதென்ன ’அட்லாப்பம்’னு கேட்குறீங்களா..? கொஞ்சம் பொறுங்க பாஸ். நாயகம் அக்காவே ரெஸிப்பி சொல்றாங்க. ’பச்சரிசி மாவு, ரவை, கடலைப்பருப்பு, தேங்காய், சர்க்கரை, முட்டை, ஏலக்காய், திராட்சை, முந்திரி கூட கொஞ்சம் நெய் சேர்த்து, தட்டுல கொட்டி மண் பானையில வெச்சு, தம் போட்டு இறக்கினா, காசிமேட்டு ‘அட்லாப்பம்’ ரெடி.
சுவையில உருக நினைச்சா, அப்டியே காசிமேடு பக்கம் போங்க...அதுக்கு முன்ன ஒரு டெமோ வேணுமா, வீடியோ இருக்கவே இருக்கு பாத்துக்கோங்க..!
No comments:
Post a Comment