Monday, 26 June 2017

கோவில்களில் இறைவனை வழிபட முறைகள்

கோவில்களில் இறைவனை வழிபட பலவழி முறைகள் உள்ளன அதில் முதலாவதாக மனதார வழிபட வேண்டும் கடமைக்காக வழிபடக்கூடாது லட்சுமி வாசம் செய்யும் நமது இரண்டு கரங்களை இணைத்து, இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் வைத்து, ஒருநொடியேனும் மனதார வணங்க வேண்டும். ஆண்கள் வழிப்படுமுறையான அஷ்டம வழிபாடு எட்டு அங்கமும் தலை, முகம், இரண்டு தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாதநுனி தரையில் படும்படியாக வீழ்ந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு வணங்குதல் மேலும் பெண்கள் வழிபடும் முறையும் பெண்கள் தங்களது பஞ்சாங்கத்தையும் (பஞ்சம் ஐந்து; அங்கம் உடற்பாகம்) இறைவனிடம் முழுமையாக சமர்ப்பணம் செய்து வணங்க வேண்டும். இம்முறையில் தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதநுனிகளை பூமியில் வைத்து இறைவனை வணங்கவேண்டும் மேலும் சில வழிமுறைகளும் உண்டு அதயும் பிறகு பார்க்கலாம்

2 comments: