Monday, 5 June 2017

ஆன்மிகம்

தன்னை அறியும் உன்னதமான கலைக்கு வழங்கப்படும் பெயர்தான் ஆன்மிகம்.
ஆன்மிகம் என்பது எந்த ஒரு மதத்தையோ, ஜாதியையோ, இனத்தையோ, தேசத்தையோ.................. சார்ந்தது அல்ல. ஆன்மிகம் என்பது அறிவை சார்ந்தது. "நான் யார்" என்னும் திறந்த ரகசியத்திற்கு திறவுகோலாக இருப்பதே ஆன்மிகம்.
நீங்கள் நீரில் மிதப்பதோ, திவ்விய காட்சிகள் காண்பதோ, முக்காலத்தை அறிவதோ, மாயாஜால செப்பிடு வித்தைகள் புரிவதோ,.................. அல்ல ஆன்மிகம், இவை எதற்கும் ஆன்மிகத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
நீங்கள் வாழும் வாழ்கையை சாதாரணமாக, மிகவும் சாதாரணமாக, நடக்கும் அனைத்தையும் புரிதலுடன் ஏற்றுக்கொண்டு, எதையுமே எதிர்க்காமல், உங்கள் வாழ்கையை இனிமையாக்க உதவுவதே ஆன்மிகம்.

1 comment: