Monday 12 June 2017

முன் ஜென்மத்தில் ராவணன் என்னவாக பிறந்தார் எனத் தெரியுமா? சொன்னா ஆச்சரியப்படுவீங்க..

இந்தியாவின் இரண்டு முக்கியமான புராண இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தின் முக்கிய எதிரி தான் ராவணன். இவர் மிகவும் சக்தி வாய்ந்த ஓர் அசுர அரசராக கருதப்படுபவர். ஆனால் ராவணன் முந்தைய ஜென்மத்தில் என்னவாக பிறந்தார் எனத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
அசுர அரசரான ராவணன், சொர்க்கலோக கடவுளான இந்திரனை வென்று, ஒன்பது கிரகங்களையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததோடு, அனைத்து வேதங்களையும் அறிந்தவராக மற்றும் தன் தவத்தால் சிவனை மகிழ்ச்சியுறச் செய்து வரத்தையும் பெற்றவர் ஆவார்.
ஆனால் முந்தைய காலத்தில் ராவணன் இவ்வளவு பலம் வாய்ந்தவர் அல்ல. அவர் யார் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ராவணன் தன் முந்தைய பிறப்பில் ஒரு காவலாளியாக பிறந்தார். அதுவும் பலமற்றவராக மற்றும் புத்திக்கூர்மை அற்றவராகவும் இருந்தார்.
வைகுண்டத்தில் ஜெயன், விஜயன் என்னும் இரண்டு வாயில் காப்பாளர்கள், விஷ்ணுவிற்கு காவலாக இருந்தனர். இவர்கள் இருவரும் வைகுண்டத்தின் 7 ஆவது வாசலில் காவல் காத்தனர். அதில் ஜெயா தன் அடுத்த ஜென்மத்தில் ராவணனாகவும், விஜயன் கும்கர்ணனாகவும் பிறந்தார்.
ஒருமுறை வைகுண்டத்திற்கு நான்கு முனிவர்கள் வருகை புரிந்தனர். அவர்கள் பிரம்மாவின் மகன்களாவர். இந்த நால்வரும் ஜெயன் மற்றும் விஜயனிடம் உள்ளே விடுமாறு கூறினர். அவர்களிடம் இவ்விருவரும் தங்களை சாபத்தில் இருந்து விடுவிக்க விஷ்ணுவிடம் கேட்குமாறு வேண்டினர்.
விஷ்ணுவை சந்தித்த முனிவர்கள், ஜெயன் மற்றும் விஜயனை சாபத்தில் இருந்து விடுவிக்குமாறு கேட்டனர். விஷ்ணுவோ, அவர்களை சாபத்தில் இருந்து முழுமையாக விடுவிக்க முடியாது. இருப்பினும் அதன் காலத்தை வேண்டுமானால் குறைத்துக் கொள்ள முடியும் என்றார். அதோடு அவர்களது சாபத்தின் காலத்தை 100 ஆயுர்காலத்தில் இருந்து 3 ஆயுர்காலமாக குறைத்தார். அதாவது, இவர்கள் இருவரும் மூன்று பிறவிகளிலும் அசுரர்களாக பிறவி எடுப்பார்களாம்.
இவர்களது முதல் பிறவி ஹிரன்யக்ஷா மற்றும் ஹிரன்யகசிபு ஆகும். இப்பிறவியில் இந்திரனின் பெருமையை அழிப்பவர்கள் என்று புகழ்பெற்றவர்கள். அதில் ஹிரன்யக்ஷா விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான பன்றி அவதாரத்தால் கொல்லப்பட்டார், அதே சமயம் ஹிரன்யகசிபு விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரத்தால் கொல்லப்பட்டார்.
இரண்டாவது பிறவியில் ராவணன் மற்றும் கும்பகர்ணனாக பிறவி எடுத்து, ராமரின் கையால் அழிவை சந்தித்தனர்.
கடைசி பிறவியான மூன்றாம் பிறவியில், தந்தவர்கா (குந்தியின் சகோதரியின் மகன்) மற்றும் ஷிஷபாலாகா (கிருஷ்ணரின் சுதர்ஷன் சக்கரத்தால் தலை துண்டிக்கப்பட்டவர்) தோன்றினர்.
மூன்று பிறவியிலும், ராவணன் விஷ்ணுவின் கையால் அழிவை சந்தித்து, சாப விமோட்சத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment